இந்தியாவுக்கான புதிய பாராளுமன்ற கட்டிடம் டெல்லியில் உருவாகி வருகிறது. இதற்கான கட்டுமான பணிகளை பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 26 ஆம் தேதி நேரில் சென்று பார்வையிட்டார். சுமார் ஒரு மணி நேரம் அங்கிருந்த பிரதமர் கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
அமெரிக்க சுற்று பயணத்தை தொடர்ந்து அவசர அவசரமாக கட்டுமான பணிகளை பார்வையிட்ட பிரதமர் மோடியின் செயலை எதிர்கட்சிகள் கடுமையாக சாடின. இதனிடையே இயக்குனர் அவினாஷ் தாஸ் 'நாளைய புகைப்படம்' எனும் தலைப்பில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை பதிவிட்டார்.
புகைப்படத்தில் பிரதமர் மோடி உயரமாக நிற்பதும், அவரின் எதிரே புகைப்பட கலைஞர் தரையில் படுத்துக் கொண்டு புகைப்படம் எடுக்கும் காட்சி இடம்பெற்று இருக்கிறது. இதே புகைப்படத்தை பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அது எடிட் செய்யப்பட்ட ஒன்று என தெரியவந்தது. சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்களை செப்டம்பர் 26 ஆம் தேதி தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இதே புகைப்படங்களை மத்திய மந்திரி பியூஷ் கோயலும் பதிவிட்டார்.
இவற்றில் பிரதமர் மோடி மட்டுமே காணப்படுகிறார். அந்த வகையில் வைரல் புகைப்படங்கள் இணைய விஷமிகளால் மாற்றப்பட்டு இருப்பது உறுதியாகி விட்டது.

மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு – கர்நாடகா இடையே
யூடியூப் சேனல்களை தொடங்கி அதன் மூலம் பிரபலமானவர் மதன்
தமிழ் திரையுலகில் 1970-80-ம் ஆண்டுகளில் பிரபல கதாநாயகியாக
டெல்லியில் உள்ள சந்தைகள், மக்கள் அதிகமாக கூடும் இடங்க
ஜம்மு காஷ்மீரின் சோபோர் பகுதியில் போலீசாரும், பாதுகாப
நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் இன்று
நாடு முழுவதும் பள்ளி பொதுத்தேர்வை எதிர்க்கொள்வது குற
டெல்லியில், ரேஷன் பொருட்களை வீடு தேடிச்சென்று வழங்கும கடந்த இரு நாட்களாக சமூக வலைதளங்களை சுகாதாரத் துறை அமை கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சுழல்பந்த மும்பை காங்கிரஸ் தலைவராக பாய் ஜக்தாப் கடந்த டிசம்பர் விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குச் சவாடிகளுக்கு அனுப த.மா.கா.வில் இருந்து மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள
