14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் நேற்றுடன் லீக் சுற்று நிறைவடைந்தது. லீக் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்கு முந்தைய பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
போட்டியில் இன்று ஓய்வு நாளாகும். நாளை (ஞாயிற்றுக்கிழமை) துபாயில் இரவு 7.30 மணிக்கு நடக்கும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதிச்சுற்றில் புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் கோதாவில் குதிக்கின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும். தோல்வி அடையும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும்.
நாளை மறுநாள் (11-ம் தேதி) சார்ஜாவில் நடக்கும் வெளியேற்றுதல் சுற்றில் புள்ளிப்பட்டியலில் 3-வது மற்றும் 4-வது இடங்களைப் பெற்ற பெங்களூரு, கொல்கத்தா அணிகள் சந்திக்கின்றன. இதில் தோற்கும் அணி தொடரில் இருந்து வெளியேறும். வெற்றி பெறும் அணி, இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதிச்சுற்றில் தோல்வி அடையும் அணியுடன் இரண்டாவது தகுதிச்சுற்றில் 13-ம் தேதி மோதும். இறுதிப்போட்டி வரும் 15-ம் தேதி துபாயில் நடைபெறுகிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இரண
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட
ஐபிஎல் தொடர் மூன்று போட்டிகளை கடந்த நிலையில், இன்றைய ப
மகளிருக்கான ஆசியக் கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடரின், சம்ப
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, அவுஸ்ரேலிய பகிரங்க
தென்னாபிரிக்கா அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில்,
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது லீக் ஆட்டம் இ
அமெரிக்காவில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி நடைப
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் இரண
இங்கிலாந்து தொடரை முடித்து விட்டு தாயகம் திரும்பிய இல
கொரோனா பரவலால் கடந்த ஆண்டு பெரும்பாலான பேட்மிண்டன் போ
இந்தோனேசியாவில் உள்ளூர் அணிகளுக்கு இடையே கால்பந்து ப
இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் விபத்தில் பலியான செய்து அற
வீதி பாதுகாப்பு உலகத் தொடரின் 11ஆவது லீக் போட்டியில் அவ
இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலத்தை வென்று கொடுத்துள
