இஸ்ரேலில் தற்போது 20,000 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் உள்ளனர், இதில் 94 பேர் தீவிர நோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று பரவ தொடங்கியதில் இருந்து இதுவரை இஸ்ரேலில் 8,243 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில், இஸ்ரேல் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரல் நாச்மன் ஆஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
கொரோனா நோயால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கான நான்காவது தடுப்பூசியை இஸ்ரேல் அங்கீகரித்துள்ளது. தொற்று நோய் பரவல் குறித்த ஆய்வுகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சூழலுக்கு ஏற்றவாறு நான்காவது பூஸ்டர் டோஸை பொதுமக்களுக்கு வழங்குவது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்வார்கள். ஒரு வருடத்திற்கு முன்பு ஃபைசர் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த தொடங்கிய முதல் வரிசை நாடுகளில் இஸ்ரேலும் இருந்தது.
கடந்த கோடை காலம் முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை இலவசமாக வழங்கத் தொடங்கியது. இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக கொரோனா வைரஸ் பாதிப்புகளை தடுக்கும் மாத்திரைகளை ஏற்றுமதி செய்யும் நடவடிக்கையை இஸ்ரேல் வியாழன் முதல் தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் கடந்த சில
உக்ரைன் மீது படையெடுக்கவே ரஷ்யா படைகளைக் குவித்துள்ள
உக்ரைனுக்கு எதிரான போரில் உணவை ஆயுதமாக ரஷ்யா பயன்படுத
நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தா
ரஷ்யாவுக்கு எதிரான போரில் இறுதி வரை போராடுவோம் என உக்
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 45 நாளாகிறது. பல்வேறு ந
மதிப்பிலான சரக்குகளுடன் மலேசியா வழியாக நெதர்லாந்து ந
உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின்
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் ஹர்னாய் மாவட்ட
உக்ரைன் தலைநகர் கீவ் அருகே உள்ள புச்சா நகரில் மனித உரி
உலகிலேயே மிகப்பெரிய வைரம் 1905-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க ந
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 53 இடங்களைக் கொண்ட
அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கொரோனா த
ஆப்கானிஸ்தானில் ஆட்சியமைத்துள்ள
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
