ஜம்மு- காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படை வீரரை இந்திய ராணுவத்தினர் சுட்டு கொன்றனர்.
இது குறித்து ராணுவ காலாட்படை பிரிவு மேஜர் ஜெனரல் பென்தர்கர் கூறியது:-
காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கிரன் செக்டார் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவர், ஊடுருவ முயன்றார். இந்திய பாதுகாப்பு படையினர் அந்த வீரர் மீது நடத்திய தாக்குதலில் அவர் உயிரிழந்தார். அவர் குறித்து ஆராய்ந்தபோது, உயிரிழந்த வீரர் முகமது ஷபீர் மாலிக் என தெரியவந்துள்ளது. அவரிடமிருந்து ஏகே ரக துப்பாக்கி, வெடிமருந்து, கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியுள்ளது. ஹாட்லைன் மூலம் பாகிஸ்தான் ராணுவத்தினரை தொடர்பு கொண்டு உடலை பெற்றுக்கொள்ளும்படி கூறியுள்ளோம்.

இந்தோனேசியாவில் மாயமான நீர்மூழ்கி கப்பல் கடலுக்கு அட
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா மீது ஐரோப்பிய யூன
உக்ரைன் மீது ரஷ்யா போரை தீவிரப்படுத்தியுள்ள நிலையில்
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக
அபுதாபி தடுப்பூசி மையத்தின் இயக்குனர் டாக்டர் கோசி ஜா
உக்ரைன் மீதான போர் இரண்டு வாரங்கள் கடந்தும் போர் தொ
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது.
பிரேசில் நாட்டின் அதிபராக 2019 ஜனவரி 1-ந் தேதி முதல் பதவி வ
1991 வரையில் சோவியத் யூனியன் ஏறக்குறைய 1,700 அணு ஆயுதங்கள
போலந்து எல்லைக்கு அருகில், உக்ரைன் இராணுவ தளத்தின் மீ
குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து பிர
எதிர்வரும் 5 வருடங்களில் புவியின் வெப்பநிலை 1.5 பாகை செல
ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீ
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளிடையே கடுமையான போர் இடம்ப
பல்வேறு நாடுகள் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்கு
