எண்ணெய் வளமிக்க மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் கார்களுக்கு பெரும்பாலும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, கஜகஸ்தான் அரசு இந்த எரிபொருள் மீதான விலையை அண்மையில் உயர்த்தியது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் வெடித்தது.
இதையடுத்து, கஜகஸ்தானின் மிகப்பெரிய நகரமான அல்மாட்டி, மேற்கு மங்கிஸ்டாவ் மாகாணத்தில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. அல்மாட்டி நகரில் மேயரின் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் சூறையாடினர். அவர்களை விரட்டியடிக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் இரு தரப்புக்கும் இடையில் பயங்கர மோதல் வெடித்தது.
அரசுக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தால், அந்நாட்டின் அதிபர் காசிம் ஜோமார்ட் டோகாயேவ் அல்மாட்டி நகரிலும், மேற்கு மங்கிஸ்டாவ் மாகாணத்திலும் 2 வார காலத்துக்கு அவசர நிலைபிரகடனப்படுத்தப்படுத்தினார்.
அத்துடன், திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு மீதான விலையை குறைப்பதாக அறிவித்தாலும், போராட்டமும், வன்முறையும் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், தொடர் போராட்டம் மற்றும் வன்முறை காரணமாக போலீசார் உள்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக, கஜகஸ்தான் பிரதமர் அஸ்கர் மாமின் தலைமையிலான அரசு நேற்று ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் - ரஷ்யா இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், தல
கார்கிவை பாதுகாக்கும் உக்ரேனிய துருப்புக்கள் ரஷ்யா எ
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான பேராயுதமாக தடுப்பூசி க
பல்வேறு எதிர்ப்புகளுக்கும் மத்தியில் ஆயிரத்துக்கும்
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பேசிய ஓடியோ ஒன்று ஊடகங்களில்
ஐரோப்பாவில் வசிக்கும் பெருந்தொகையான இலங்கையர்கள்
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு பற்றி ரஸ்யாவின் தொலைக்
விண்வெளித் தொழில்நுட்பத்தில் உச்சத்தில் இருக்கும் எ
கட்டுநாயக்க விமான நிலையத்தில்
உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு ரஷ்யாவில் கடந்த 2012-ம் ஆண்டு சமூக வலைதளங்களில் சர்ச்சைக எப்போதும் சினிமாவில் ஹீரோ ஹீரோயின் மட்டுமின்றி துணை ந நைஜீரியா நாட்டின் வடமேற்கில் உள்ள கெப்பி மாநிலத்தில் அமெரிக்கா, கனடா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 17 நாடுகளை தன இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 கொரோனா தடுப்
