ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து ஆசியாவில் பல்வேறு நாடுகளில் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவி வருகிறது. குறிப்பாக, தலிபான்களால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், எத்தகைய சூழ்நிலையையும் சமாளிக்க இந்தியா தயாராக உள்ளது என பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பாக பஞ்சாப் பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்ற விரிவுரை நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் சூழ்நிலை நமது நாட்டின் பாதுகாப்பு குறித்த பல்வேறு புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆப்கானிஸ்தான் நிலவரத்தை நமது அரசு தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. அங்கு நிலவி வரும் சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்தி இந்தியாவுக்குள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தேசவிரோத சக்திகள் ஊக்குவிக்கக் கூடாது என நமது அரசு விரும்புகிறது.
ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் மத்திய அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது. எத்தகைய சூழ்நிலையையும் சமாளிக்க இந்தியா தயாராக உள்ளது என தெரிவித்தார்.
புனே-நாசிக் நெடுஞ்சாலையில் கடந்த 9-ந்தேதி மாலை 6.30 மணி அள
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்த ஆண்டு
இந்தியாவில் இருந்து 13 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மர
முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீடு மற்றும் அவரது உறவி
சர்வதேச ரீதியில் இன்று இலங்கை பேசுபொருளாக மாறியுள்
இப்போது தான் அமித் ஷா காஷ்மீர் அறிவிப்பை அறிவிக்க வேண
ஆந்திர மாநிலத்தின் புதிய அமைச்சரவையில் இன்று நடிகை
தெலுங்கானா மாநில முதல் மந்திரி சந்திரசேகர ராவ் 3 நாள் ப
நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் இன்று
டெல்லியில் நேற்று பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்ற தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய உள்ளாட உலகின் ஒன்பது நாடுகளுக்கு 60 இலட்சம் ‘டோஸ்’ கொரோனா த நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையி கடந்த 5 ஆண்டுகளில் பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி 334 சத கொரோனா நேரத்தில் உயிர்காக்கப் போராடும் முன்களப் பணிய
