ஆஸ்திரேலியாவில் நேற்று ஒரே நாளில் 1,305 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்தது.
கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் கோரப்பிடியில் ஆஸ்திரேலியா சிக்கியுள்ளது. டெல்டா கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் அந்த நாடு திணறி வருகிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் 2-வது மிகப்பெரிய நகரமான மெல்போர்னில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் அங்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
70 லட்சம் மக்கள் தொகை கொண்ட மெல்போர்ன் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்கனவே தொடர்ந்து 4 வாரங்களாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தற்போது மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, விக்டோரியா மாகாணத்தின் பிரதமர் டான் ஆண்ட்ரூஸ் கூறுகையில் ‘‘ஊரடங்கை திரும்பப் பெற முடியாத அளவுக்கு மெல்போர்ன் நகரில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஊரடங்குக்கு முன்பான சுதந்திரத்தை நினைத்து மகிழ்ச்சி கொள்கிறோம். மீண்டும் அந்த நாட்கள் திரும்பி வர வேண்டும் என தீவிரமாக விரும்புகிறோம்’’ என கூறினார்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடும் ஆதிக்கம் ச
உக்ரைன் மீதான ரஷ்யாவின் இந்த அத்துமீறிய ராணுவ நடவடிக்
கரீபியன் தீவில் அமைந்துள்ள மிகவும் ஏழ்மையான நாடு ஹைதி
2021-ம் நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான உலக வர்த்தக தகவ
ரஷ்யாவின் சக்திவாய்ந்த மல்டிபிள் ராக்கெட் லாஞ்சரை உக
லண்டனில் வாழும் ரஷ்ய இளம்பெண் ஒருவர் வீட்டின் முன், ’
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான பேராயுதமாக தடுப்பூசி க
மரியுபோல் நகரில் சரணடைவோம் என்ற பேச்சுக்கே இடமில்லை எ
வங்காள தேசத்தின் தேசிய தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின்
ரஷ்யாவின் திட்டமிட்ட வெற்றி தின கொண்டாட்டங்களில் த
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹரம் பயங்கர
உக்ரேனிய தேசிய பாதுகாப்பு சேவையின் மூத்த உறுப்பினர்க
இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய சவால்கள் குறித்து சீனா
சகாராவில் கடந்த 2015-ம் ஆண்டு ஐ.எஸ். அமைப்பை நிறுவிய ஷராவி
வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை நேற்று நாடு முழு
