யாழ் போதனா மருத்துவமனையில் நேற்று திங்கட்கிழமை நிலவரப்படி கொவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 129 நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களில் 10 பேர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளில் மருத்துவக் கண்காணிப்புக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
யாழ் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொவிட்-19 நோய்த்தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் இட ஒதுக்கீடு முழுமையடைந்துள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை, தெல்லிப்பளை, பருத்தித்துறை மற்றும் சாவகச்சேரி மருத்துவமனைகளிலும் கொவிட்-19 சிகிச்சைப் பிரிவுகள் அமைக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் கண்காணிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் யாழ் போதனா மருத்துவமனையில் 129 கொவிட்-19 நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். அங்கு அமைக்கப்பட்டு 2 அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளில் 10 கொவிட்-19 நோயாளிகள் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை பெறுகின்றனர்.
கொவிட்-19 நோயாளிகளின் உயிரிழப்பு அதிகரித்துள்ள நிலையில் தினமும் 5 சடலங்கள் போதனா மருத்துவமனை சவ அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. யாழ் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியின் சீரான ஒழுங்கமைப்பில் தினமும் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தோரின் சடலங்கள் கோம்பயன் மணல் மயானத்தில் சுகாதார விதிமுறைகளின் கீழ் எரியூட்டப்படுகின்றன
இரண்டாம் கட்டத்துக்கான முதல் டோஸ் தடுப்பூசியை யாழ்ப்
இலங்கையில் 80 வீதமான மக்கள் தொற்றா நோய்களினால் பாதிக்க
மட்டக்களப்பில் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் கடந்த 2
இலங்கையில் எதிர்வரும் நாட்களில் யோகட் ஒன்றின் விலை 55-60
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித
வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதற்கு ஆத
வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் த
கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று கொழும்பில்
யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகு
அரசியலமைப்பின் 21வது சீர்திருத்தம் நாளை (23) அமைச்சரவையி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் கலந்துரையாடியதைத் தொ
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து நாட்டின் உயர்மட்ட ப
ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் ப
சுமார் நான்கு மணி நேரத்தில் 55,944 வாகனங்கள் கொழும்பு நகர
பாக்கு நீரிணையில் தொடரும் மீனவர் பிரச்சினை இலங்கை-இந்
