உடுமலை அருகே கொல்லப்பட்ட ஆண் யானையின் தந்தத்தை நேற்று வனத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரட்டூரில், கடந்த சில நாட்களுக்கு முன்பு 35 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று இறந்த நிலையில் நிலையில் கிடந்துள்ளது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், யானைக்கு கால்நடை மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு மேற்கொண்டதில், யானையை மர்மநபர்கள் கொன்று அதன் தந்தத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.
இதனை அடுத்து, கோவையில் இருந்து வரவழைத்த வனத்துறை மோப்பநாய் மற்றும் டிரோன் கேமரா மூலம் வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், நேற்று வனத்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் கரட்டூர் பகுதியில் உள்ள பாலத்தின் இடுக்கில் பதுக்கி வைத்திருந்த தந்தம் மீட்கப்பட்டது. இந்த தேடுதல் வேட்டையில் ஆனைமலை புலிகள் காப்பக உதவி இயக்குநர் கணேஷ் ராம் மற்றும் உடுமலை வனச்சரகர் தனபாலன் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். மேலும், தந்தத்தை திருடிய நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக இந்தியா, வ நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முக உலகில் ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் எந்தவொரு பிரதிபல மேற்கு வங்காள கவர்னராக ஜெக்தீப் தாங்கர் கடந்த 2019-ம் ஆண் முன்னாள் துணை பிரதமரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான திமுக தலைவர்
சென்னை மாவட்டத்திலுள்ள வண்ணாரப்பேட்டை பெரியபாளையத்த இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த மாணவர்கள் பிரச்சனை தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து < பஞ்சாப் மாநிலம் பெராஸ்பூரில் நலத்திட்டங்களை தொடங்கி மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் புதிய விதி 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங ஜார்க்கண்ட் மாநிலம் செத்மா சுகாதார துணை மையத்தில் ஒப்
