More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை சோதனை கவுண்ட்டர்களில் குவிந்த பயணிகள்!
சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை சோதனை கவுண்ட்டர்களில் குவிந்த பயணிகள்!
Sep 09
சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை சோதனை கவுண்ட்டர்களில் குவிந்த பயணிகள்!

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் இந்தியாவில் பன்னாட்டு விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. மத்திய அரசு அனுமதி பெற்ற நாடுகளுக்கு மட்டும் விமான சேவை செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்லும் பயணிகள் கட்டாயம் கொரோனா பரிசோதனை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்ற வழிமுறைகள் உள்ளன.



வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள், 72 மணி நேரத்துக்கு முன்பு ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை சான்றிதழ் காட்டினால் மட்டுமே இந்தியாவுக்கு வரும் விமானங்களில் அனுமதிக்கப்படுகின்றனர்.



இந்த நிலையில் நேற்று ஒரே நேரத்தில் குவைத், தோகா, சார்ஜா மற்றும் துபாய் போன்ற நாடுகளில் இருந்து அடுத்தடுத்து 4 விமானங்கள் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையம் வந்தன. அதில் வந்த பயணிகள் அனைவரும் விமான நிலையத்தில் உள்ள குடியுரிமை கவுண்ட்டர்களில் உள்ள அதிகாரிகளிடம் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சோதனை செய்ய வரிசையில் நின்றனர்.



4 விமானங்களில் வந்த பயணிகள் அனைவரும் ஒரே நேரத்தில் குடியுரிமை சோதனை கவுண்ட்டர்களுக்கு வந்ததால் அதிகப்படியான கூட்டம் அலைமோதியது. ஆனால் 3 கவுண்ட்டரில் மட்டும் பரிசோதனை செய்யப்பட்டதால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் சமூக இடைவெளியை மறந்து பயணிகள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு நின்றனர். இதனால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது.



விமான நிலையத்தில் 3 குடியுரிமை சோதனை கவுண்ட்டர்கள் மட்டுமே செயல்பட்டதாகவும், மீதம் இருந்த கவுண்ட்டர்களில் அதிகாரிகள் யாரும் இல்லை என்பதால் விமான பயணிகள் வெகு நேரமாக ஒருவர் மேல் ஒருவர் இடித்தபடி நீண்ட வரிசையில் காத்து நின்றதால் கொரோனா முன்னெச்சரிக்கையாக எந்த ஏற்பாடுகளும் சரியாக செய்யவில்லை என்று கூறி பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



இதையடுத்து விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், கூடுதலாக மேலும் 2 சோதனை கவுண்ட்டர்களை திறந்தனர். விமான நிலையத்தில் குடியுரிமை சோதனை கவுண்ட்டரில் ஒரே நேரத்தில் அதிகப்படியான பயணிகள் குவிந்து இருப்பதை பயணி ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.



 



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar28

ஆந்திராவில் நடந்த சாலை விபத்தில் 5 பெண்கள் உட்பட 8 தமிழ

Mar16

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருகி

Jun08

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாள

Mar30

தாராபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் இன்று (செவ

Jun02

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5

Apr10

தொழிலதிபரை மணந்த சில நாட்களில் கன்னட நடிகை ஒருவர் பின

Jul29

பயிர் காப்பீட்டு திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோ

Jun02

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவ தொடங்கிய பிறகு கடந்த ஏ

Apr25

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் மின்னல் வேகத்தில் அ

Mar09


சாதாரண செல்போன்களிலும் கூட இனிமேல் பண பரிவர்த்தனை

Sep06

முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி சமூக வலைதளத்தில் வ

Nov02

கேரள மாநில முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் அ

May31

போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நி

Jun13

இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ம

Oct14

குவாட் மற்றும் ஜி-20 போன்ற நிறுவனங்கள் மற்றும் சர்வதேச

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 03 (22:04 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 03 (22:04 pm )
Testing centres