ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய பின்னர் அந்த நாடு முழுவதுமாக தலிபான்கள் வசமானது. இதைத்தொடர்ந்து தலிபான்கள் தற்போது தங்களது இடைக்கால அரசை அறிவித்துள்ளனர். முன்னதாக தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதும் முதல் நாடாக அவர்களுக்கு சீனா தனது ஆதரவைத் தெரிவித்தது. அதேபோல் தலிபான்களும் சீனா தங்களின் மிக முக்கிய கூட்டாளி என தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் தலிபான்களுடன் சீனாவுக்கு உண்மையான சில பிரச்சினைகள் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது தலிபான்களுக்கு சீனா நிதியுதவி செய்வது அமெரிக்காவின் நலன்களுக்கு எதிரானதா என ஜோ பைடனிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ஜோ பைடன் "தலிபான்களிடம் சீனாவுக்கு உண்மையான சில பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றை சரி செய்ய சீனா சில ஏற்பாடுகளை செய்ய முயன்று வருவதை உறுதியுடன் கூற முடியும்" என கூறினார்.
மேலும் அவர் சீனாவை தவிர பாகிஸ்தான், ரஷியா மற்றும் ஈரான் போன்ற அண்டை நாடுகள் தலிபான்களுடன் இணைந்து செயல்படுவதற்கான ஏற்பாடுகளை செய்யும் என்று தான் எதிர்பார்ப்பதாக கூறினார்.
உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதற்காக ரஸ்யா நடத்தவ
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சுவிட்சர்லாந்து
உக்ரைனில் தாக்குதல் நடத்திவரும் ரஷ்ய இராணுவ துருப்பு
உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற திரைப்படங்களில் ஹாரிபா
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று மலாவி. 1 கோடியே 80 லட்சம் மக்க
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் கடந்த சில
தெற்கு உக்ரைனில் இருந்து சபோரிஜியா வரையுள்ள பகுதிகளி
உக்ரைன் மீதான போர் இரண்டு வாரங்கள் கடந்தும் போர் தொ
அமெரிக்காவின் உட்டா மாகாணம் கனோஸ் நகருக்கு அருகே மிகப
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர
அணு ஆயுத விவகாரத்தில் வடகொரியா மற்றும் அமெரிக்கா இடைய
அவுஸ்திரேலியாவில் பரவி வரும் காட்டுத் தீயினால் 30 க்
காசா முனை மீது இஸ்ரேல் நடத்தி வரும் வான் தாக்குதல்களி
தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ர
புதின் தனது நீண்ட காலத் தோழியான அலினா கபாவே என்ற பெண
