உள்ளாட்சி தேர்தலில் தேமுதிகவின் பலத்தை நிச்சயமாக நிரூபிப்போம் என்று விஜயகாந்த் கூறியுள்ளார். தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கிறது. தேர்தலை சந்திக்க ஆளுங்கட்சியான திமுக தீவிரமாக களம் இறங்கியுள்ளது. தேர்தலை சந்திக்கும் வகையில் திமுகவினர் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.
அதேநேரத்தில் அதிமுகவும் தேர்தலை சந்திக்கும் வகையில் பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. இந்நிலையில் வர உள்ள உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக விஜயகாந்த் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தேமுதிக துவங்கி 16 ஆண்டுகள் முடிவடைந்து 17ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தோல்வி என்பது சறுக்கல் தானே தவிர அது வீழ்ச்சி அல்ல. எனவே, வருகிற உள்ளாட்சி தேர்தலில், அடுத்தடுத்து நடைபெற உள்ள தேர்தல்களிலும் தேமுதிக பலத்தை நாம் அனைவருக்கும் நிச்சயமாக நிரூபிப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கென தனி இணை அறிக்கை வெளியிட வேண
மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் ஒவ்வொரு மாதமும் விர
அரசியல், மத கூட்டங்களை நிறுத்தவில்லை என்றால் கொரோனா வ
வடகிழக்கில் பல்வேறு இனக்குழுக்களின் பயங்கரவாதத்தை ம
நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் அலுவலகங்களில் குறைபாட
வடபகுதி கடற்றொழிலாளர் சம்மேளனங்களின் கோரிக்கையை அடு
நெல்லை மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் கலைச்ச
நாம் தமிழர் முன்வைக்கும் மாற்றம் என்பது அதிமுகவை அகற்
கடந்த கால பேச்சுவார்த்தைகளில் நடந்ததை ஒதுக்கி வைத்து
தெலுங்கானா மாநிலம் மகபூப் நகரை சேர்ந்தவர் ராம்குமார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,527 பேருக்கு கொரோனா வை
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு நாளை (புதன்கிழமை) பிறந
* மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே கலைஞர் கருண
முதல்வர் மு. க. ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக புகா
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில
