சீனாவை அடக்குவதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகளும் இணைந்து, ‘அக்கஸ்’ என்ற புதிய அமைப்பை தொடங்கியுள்ளன.இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுடன் இணைந்து ‘அக்கஸ்’ (ஏயுகேயுஎஸ்) என்ற புதிய அமைப்பை அமெரிக்கா நேற்று ஏற்படுத்தியது.
இந்த நாடுகளின் ஆங்கில முதல் எழுத்துகளை எடுத்து, இதற்கு இந்த பெயரிடப்பட்டுள்ளது. இவை இணைந்து, இந்தோ-பசிபிக் புதிய முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த நடவடிக்கை குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில், ‘இந்தோ-பசிபிக் பகுதியில் நீண்ட காலத்துக்கு ஸ்திரதன்மையையும் உறுதி செய்வதற்கான அங்கீகாரமாக இந்த ஒப்பந்தம் இருக்கும்,’’ என்றார்.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஆஸ்திரேலியாவின் பலத்தை அதிகரிக்க, அந்நாட்டுக்கு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்கவும் அமெரிக்காவும், இங்கிலாந்தும் முன்வந்துள்ளன. இந்த புதிய கூட்டணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா, இதனால் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஆயுத போட்டி அதிகரிக்கும் என எச்சரித்துள்ளது.
முதுகில் குத்தி விட்டது
பிரான்சிடம் இருந்து டீசல் தொழில்நுட்பத்திலான நீர்மூழ்கி கப்பல்களை வாங்குவதற்கு ஆஸ்திரேலியா கடந்த 2016ல் ஒப்பந்தம் செய்தது. அமெரிக்கா, இங்கிலாந்துடன் இணைந்து புதிய அமைப்பை தொடங்கிய நிலையில், இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக ஆஸ்திரேலியா நேற்று அறிவித்தது. இதற்கு, ‘ஆஸ்திரேலியா எங்களின் முதுகில் குத்திவிட்டது’ என்று பிரான்ஸ் கடும் எதி்ர்ப்பு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் பெண் செய்தி வாசிப்பாளர்கள் தொலைக்கா
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய பி
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கர
மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரச
சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்த
இந்தோனேசியாவில் மத்திய சுலவேசி மாகாணத்தில் நேற்று மு
ஜம்மு காஷ்மீரின் பண்டிபோரா மாவட்டத்தில் மருந்துக்கட
பண மோசடி மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி அள
ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் புதிய தாக்குதல் உத்தியொன்
உக்ரைனில் ரஷ்யப் படைகள் முன்னேறி வரும் நிலையில், உக
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் தலைநகர் நியாமியில் தொ
எத்தியோப்பியாவின் வடக்கு பிராந்தியமான டைக்ரேயின் மு
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதல் 9ஆவது ந
அவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் கொரோனா தட
