வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக இந்திய தொலைகாட்சிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் கமல்ஹாசனும், தெலுங்கில் நாகார்ஜுனாவும், மலையாளத்தில் மோகன் லாலும், இந்தியில் சல்மான் கானும் தொகுத்து வழங்கி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி, இந்தியில் இதுவரை 14 சீசன் முடிவடைந்துள்ளது. தற்போது 15-வது சீசனுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 15-வது சீசனை தொகுத்து வழங்க உள்ள நடிகர் சல்மான் கானுக்கு ரூ.350 கோடி சம்பளம் பேசி இருப்பதாக தகவல் வெளியாகி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த இரண்டு சீசன்களாக ஒரு வாரத்துக்கு ரூ.13 கோடி சம்பளம் வாங்கி வந்த சல்மான் கான், தற்போது அதனை ரூ.25 கோடியாக உயர்த்தி உள்ளாராம். இதன்மூலம் அவர் தொகுத்து வழங்க உள்ள 14 வாரத்துக்கு ரூ.350 கோடி சம்பளம் கிடைக்க உள்ளதாக கூறப்படுகிறது. ‘பிக்பாஸ் 15’ நிகழ்ச்சிக்காக நடிகர் சல்மான் கான் வாங்கும் சம்பளம் ‘பாகுபலி 2’ பட பட்ஜெட்டை (ரூ.250 கோடி) விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

நானி மற்றும் நஸ்ரியா கூட்டணியில் உருவாகியுள்ள 'அடடே
தனுஷ் ஜோடியாக ஆடுகளம் படத்தில் அறிமுகமாகி முன்னணி இடத
பீஸ்ட் படத்திற்கு எதிர்பார்த்த அளவுக்கு ரெஸ்பான்ஸ் க
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தார
விஜய் பீஸ்ட் திரைப்படம் கடந்த 13ம் தேதி பிரம்மாண்டமாக ர
பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பி
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 28ம் தேதி வெளிய
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சூர்யா.
அறிமுக இயக்குனர் ஜாக் ஹாரிஸ் இயக்கும் புதிய படம் 'யூக
தமிழில் கொடி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து பிரபலமானவ
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இய
ஷங்கர் - ராம் சரண் கூட்டணியில் உருவாகும் படத்தின் ஒளிப
தமிழில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் வெளி
சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தல
வசூல் செய்ததாக சொல்லப்பட்ட பிகில்.!
நடிகர் விஜய்
