இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டிருக்கும் மிலிந்த மொறகொட இன்று தலைநகர் புதுடில்லியில் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் தனது நற்சான்றுப் பத்திரத்தைக் கையளித்தார்.
கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலைக் கருத்தில்கொண்டு, இந்திய வெளிவிவகார அமைச்சால் உரிய சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றி காணொளி வடிவில் ஒளிபரப்பு செய்யக்கூடிய விதமாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி இந்திய ஜனாதிபதி அவரது உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்டிரபதி பவனிலிருந்து வெளிவிவகார அமைச்சுடன் இணைந்துகொண்டதையடுத்து, அவரிடம் மிலிந்த மொறகொட நற்சான்றுப்பத்திரத்தைக் கையளித்தார்.
அதனைத் தொடர்ந்து இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சார்பில் இந்திய ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த தூதுவர் மிலிந்த மொறகொட, இந்தியத் தூதுக்குழு செயற்திட்டத்தின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் மேம்படுத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.


பல்கலைக்கழகத்திலோ வெளியிலோ வன்முறைக்கு ஒருபோதும் இட
2022 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படைய
இந்தியாவை வலிந்து சண்டைக்கு இழுக்கும் செயற்பாடுகளை ச
வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை
அரச ஊழியர்கள் அலுவலகங்களுக்கு கடமைக்காக வருகை தரும் ப
சுமார் நான்கு மணி நேரத்தில் 55,944 வாகனங்கள் கொழும்பு நகர
உக்ரைன் நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையினால் இலங்
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெக
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாத
இலங்கையில் இன்று (27) தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக கொ
இராணுவத்தை நோக்கி தாம் சுடவில்லை எனவும், தம்மை நோக்கி
நாட்டில் எந்தவொரு குடிமகனும் உணவுப் பற்றாக்குறையால்
கடந்த காலங்களில் இலங்கைக்கு ஆதரவாக இருந்த நாடுகளும
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொட
உயர்ந்த கட்டிடங்களுக்கு மாறாக ரம்மியமான ச
