கடந்த சில தினங்களில் கோவிட் தடுப்பு செயலூக்கியினை பெற்றுக்கொள்வதில் பொதுமக்களிடத்தில் ஆர்வம் அதிகரித்துள்ளதாகப் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாளாந்த ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசியினை பெறுவதற்காகத் தடுப்பூசி மையங்களுக்கு பிரவேசிக்கின்றனர். இது ஒரு சிறந்த விடயமாகும். அனைவரும் தடுப்பூசியினை செலுத்திக்கொள்வது அவசியமாகும்.
இதேவேளை, நாட்டில் நேற்றைய நாளில் 39, 772 பேருக்கு, பைஃஸர் செயலூக்கி தடுப்பூசி செலுத்தப்பட்டதாக, தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய செயலூக்கி தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை, 5,777,838 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம், நேற்றைய தினம் 1,156 பேருக்கு பைஃஸர் முதலாம் தடுப்பூசியும், 1,411 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
408 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசியும், 537 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாகத் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
“கோட்டா கோ கம”, “ மைனா கோ கம” ஆகிய மக்கள் போராட
நாட்டின் 09 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாய
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மீண்டும் இந்தியாவுக்கு வ
கொவிட் பரவல் தற்போது கட்டுப்படுத்தப்படாவிட்டால் நாட
களுபோவில-பாடசாலை வீதியை சேர்ந்த நபர் ஒருவரை காவல்துறை
சீரற்ற காலநிலை காரணமாக ஏதேனும் அனர்த்தம் ஏற்பட்டால்,
ஹெரோய்ன், ஐஸ் உள்ளிட்ட பெருந்தொகை போதைப்பொருள் கடத்தல
இலங்கையில் கொரோனா தொற்று திடீரென அதிகரித்துள்ள நிலைய
மின் உற்பத்திக்கு போதிய எரிபொருள் கிடைக்காத காரணத்தி
வட மாகாணத்தில் மாவட்டங்களுக்கு இடையே கால்நடைகளை கொண்
யாழில் 7251 குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா பெறுமதியான
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேச்சல்தரை உட்பட பல இடங்கள
திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலக பிரிவ
வாகனங்களில் செல்வதற்கு தடை விதிப்பதற்கு எவ்வித சட்டம
இலங்கையில் இரவு வேளையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பத
