கம்பளை கலஹா பகுதியில் 12 வயதான யோகராஜா கலைவாணி எனும் சிறுமி விளையாடிகொண்டிருந்த நிலையில் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் பெற்றோரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கம்பளை நில்லம்பே பகுதியை சேர்ந்த மாணவியே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியதுள்ளது. குறித்த சிறுமி தனது அத்தையின் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது காணாமல் போனதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சிறுமியின் தந்தை கதிர்வேல் யோகராஜா கண்டி பொதுச்சந்தையில் பணிபுரிகிறார். அவர் பணிக்கு சென்ற பின்னர், தாய் பெற்றோரின் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் , அவர்களின் மூன்று பிள்ளைகளும் அருகில் வசிக்கும் சிறுமியின் தந்தையின் சகோதரியின் வீட்டிற்கு சென்றிருந்தனர்.
இதன்போது இரண்டு குடும்பத்தின் பிள்ளைகளும் ஒன்றாக விளையாடிக் கொண்டிருந்த போது சிறுமியை படிக்குமாறு அத்தை கூறியதாக தெரியவந்துள்ளது. அதன் பின்னர் நேற்று முன்தினம் மாலை பிள்ளைகள் டி.வி பார்த்துக் கொண்டிருந்த போது சிறுமி காணாமல் போயுள்ளமை தெரிய வந்ததையடுத்து அயலவர்கள் ஒன்று திரண்டு சுற்றுவட்டார வீடுகளிலும், வனப்பகுதிகளிலும் தேடியும் சிறுமி தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை.
சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட பொலிசார் மோப்ப நாய்களை கொண்டு அப்பகுதியில் சோதனை நடத்திய போதிலும் நேற்று வரை சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை என கூறப்படுகின்ற நிலையில், சிறுமி மாயமான சம்பவம் பெரும் அச்சதை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொவிட்-19 நோயாளிகளுக்கான மருத்துவ மேற்பார்வைக் காலத்த
சீன தூதரகத்தின் அதிகாரி ஒருவர் தமிழர்களின் கலாசார உடை
மித்தெனிய காரியமடித்த வைத்தியசாலையில் கடமையாற்றும்
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தங்குமிடம் ஒன்றில் இடம்பெ
தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் யார் ஜனாதிபதியாக இரு
யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற விபத்த
பெண்களுக்கான திருமண வயதில் மாற்றத்தை கொண்டு வருவதற
சுகாதாரப் பணிப்புறக்கணிப்பின் போது அங்கொட மனநல வைத்த
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி ந
நெடுந்தீவில் பனங்கானி மேற்க்கு கரையில் தொழிலு
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்த
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில் சிறப்பு
மேல், சப்ரகமுவ மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் க
இலங்கை விமானப்படையின் 70ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஏ
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கடந்த சில தினங்க
