இந்தியாவில் தொலைத்தொடர்பு துறையில் முன்னணி இருக்கும் ஜியோ நிறுவனம் தற்போது JioBook எனப்படும் மடிக்கணினியை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜியோ நிறுவனம் இந்தியாவில் காலடியெடுத்து வைத்த பின், தொலைத்தொடர்பு துறையில் ஒரு மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதன் அடிப்படையில் இந்தியாவில் மிக குறைந்த விலையில் 4G தொழில்நுட்பம் கொண்ட மொபைல் போன், மிக குறைந்த விலையில் இணையதள வசதி என பல்வேறு மாற்றங்களை இந்திய சந்தைகளில் அறிமுகமானது.
தற்போது இந்த ஜியோ நிறுவனம் JioBook எனப்படும் மடிக்கணியை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த JioBook மடிக்கணினியானது Intel, AMD ஆகியவற்றின் X86 இயங்குதளத்திற்கு மாறாக ARM என்ற இயங்கு தளத்தில் செயல்படக்கூடியது என்றும், இது windows10 என்ற மென்பொருள் தொழில்நுட்பத்தில் வெளிவரக்கூடும் என்றும் அதை Windows 11 மென்பொருள் தொழில்நுட்பம் வரை புதுப்பித்தல் செய்துகொள்ளலாம் எனவும் தெரியவந்துள்ளது.
இந்த JioBook மடிக்கணியை emdoor digital technology Co Ltd. என்ற நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், அதனை JIo நிறுவனத்தின் கீழ் விற்பனை செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் jio நிறுவனம் விரைவில் 5g மொபைல் போனை வரவிருக்கும் பங்குதாரர்கள் சந்திப்பில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் JioBook குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடலாம் என தெரிகிறது.
அரசாங்கம் அதிகளவில் வரிகளை விதித்துள்ளதன் காரணமாக தக
தற்போது ஒரு சில ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே வெ
மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு மாற
நாம் ஹார்ட் டிஸ்கை பயன்படத் தொடங்கிய சில வாரங்களில் அ
உக்ரேனின் தெற்கு நகரமான மரியுபோலில் அமைந்துள்ள சிறுவ
நோக்கியா, ஒப்போ நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு இந
டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு எலன் மாஸ்க
இலங்கையின் 74வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படவுள்
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக, மின்சாரத்தில் இயங்கு
அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வரிக
உலகில் கோடிக்கணக்கான பேர் பயன்படுத்தும் சர்ச் எஞ்சின
உலகில் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படும் ஜிமெய
இந்தியாவில் தொலைத்தொடர்பு துறையில் முன்னணி இருக்கும
ரஷ்யாவில் டிக்டோக் செயலி தனது சேவையை நிறுத்தி உள்ளதாக
நாட்டின் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வாக சுற்றுச்சூ
