சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்த்த தமிழ் இளைஞர், உடலுறுப்பு தானம் செய்ததற்காக ஜனாதிபதி கைகளில் மதிப்புமிக்க விருதை பெற்றுள்ளார்.
சக்திபாலன் பாலதண்டாயுதம் எனும் 28 வயது இந்திய வம்சாவளி தமிழர், தனது கல்லிரலின் ஒரு பகுதியை, யாரென்றே தெரியாத ஒரு வயது சிறுமிக்கு தானம் செய்ததற்காக, “தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 2021ம் ஆ ண்டின் சிங்கப்பூரார்” எனும் விருதைப் பெற்றுள்ளார்.
நேற்று (09ம் திகதி) சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாக்கோப்பிடம் இருந்து இந்த விருதைப் பெற்றார்.
ஜூலை 2020ல் சமூக ஊடகங்களில் ஒரு இளம் இந்திய தம்பதியரின் வேண்டுகோளுக்கு பதிலளித்த தண்டாயுதபாணி, தனது கல்லீரலில் 23 சதவீதத்தை 2020 செப்டம்பர் 30 அன்று ஒரு வயது குழந்தையான ரியாவுக்கு தானம் செய்தார்.
2019-ல் பிறந்த அந்த குழந்தை, பிறந்த சில வாரங்களில் பிலியரி அட்ரேசியா (biliary atresia) நோயால் பாதிக்கப்பட்டார். இந்த அரிதான நோய் கல்லீரலில் உள்ள பித்த நாளங்களை வீக்கமடையச் செய்து, பித்தப்பையில் பித்த ஓட்டத்தைத் தடுக்கிறது.
இந்த நிலை இறுதியில் கல்லீரல் செயலிழப்புக்கு வழிவகுக்கும். சக்திபாலன் பாலதண்டாயுதத்தின் உடலுறுப்பு தனித்தலை பயனடைந்த சிறுமிரியா தற்போது தனது பெற்றோருடன் சிறப்பான வாழக்கையை வாழ தொடங்கியுள்ளார்.
அதேசமயம், சக்திபாலன் பாலதண்டாயுதம் (Sakthibalan Balathandautham) இப்போது உறுப்பு தானம் செய்வதற்கான ஒரு வழக்கறிஞராக இருக்கிறார், மேலும் பலரை ஊக்குவித்து தேவைப்படும் நோயாளிகளுக்கு உதவுகிறார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் பாடகி யோஹானி டி சில்வா (Yohani de Silva) பாடிய “மெனி
இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்
தற்போது இலங்கை வந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் மிஸ் எவ
கிரிக்கட் வீரர் விராட் கோலியின் மகளின் வீடியோ ஒன்று
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்த்த தமிழ் இளைஞ
கடந்த மாதம் 26ஆம் திகதி மாலைதீவில் உயிரிழந்த இலங்கை தேச
பல வருட சிறை தண்டனைக்குப் பிறகு விடுதலையாகும் முன்னாள
உலக பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை சிறப்
முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மரணத
விண்வெளியில் ‘இறந்த’ நட்சத்திரத்தின் கடைசித் தருண
இந்தியாவுக்கு பல இலக்குகள் இருக்கின்றன. இந்தியாவின் ம
கடுமையான பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு 9 நாட்களாக கோமா
விளையாட்டிற்கு கூட தந்தையை அடிக்காமல் சிறுமி ஒருவர் த
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125-வது பிறந்தநாள், வருகிற 23-ந் த
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலுாரில் ஓவிய ஆசிர
