அடுத்த சிறுபோக பயிர் செய்கையின் போது விவசாயிகளுக்கு உதவுவதற்காக நாட்டில் உள்ள அனைத்து வயல்கள் மற்றும் பயிரப்படும் இடங்களுக்கு தலா ஒரு இராணுவ வீர் என்ற வகையில் அனுப்பி வைக்கப்படுவார்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டின் பயிர் செய்கையை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் விசேட ஆலோசனையின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக அனைத்து திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன. கமத்தொழிலுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு விவசாயிகளுக்கு தேவையான உரத்தை விநியோகிப்பது முதல் அறுவடை செய்யப்படும் வரை அனைத்து உதவிகளும் இராணுவத்தினரால் வழங்கப்படும்.
கோவிட் தடுப்பூசி செலுத்துவதில் இராணுவத்தினர் வழங்கிய உயர் பங்களிப்பை போன்று விவசாயத்தை முன்னேற்றவும் இராணுவத்தினர் உச்சளவிலான பங்களிப்பை வழங்க தயாராக இருக்கின்றனர்.
மேலும்,
இதற்கு தேவையான அனைத்து ஆலோசனைகளையும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ வழங்கியுள்ளார்.
விவசாயத்தை முன்னேற்ற பல்வேறு தரப்பினர் முன்வைத்துள்ள யோசனைகளும் இதன் போது கவனத்தில் கொள்ளப்படும்.வடக்கு, கிழக்கு உட்பட தெரிவு செய்யப்பட்டுள்ள பயிர் நிலங்களில் ஏற்கனவே இராணுவத்தினரை பயன்படுத்தி பல்வேறு பயிரிடும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் உள்ள அனைத்து பிரதான கட்சிகள் முதல் சிறுபான்ம
அபுதாபியில் இருந்து இலங்கையின் திருகோணமலைத் துறைமுக
மட்டக்களப்பு காந்திபூங்கா அருகில் உள்ள படுகொலைசெய்ய
மன்னார் ஊடக நண்பர்களின் பேராதரவுடன் ஊடகவியலாளர் எஸ்.ஜ
நாட்டில் தற்போது நடந்து வரும் அரசாங்கத்திற்கு எதிரான
அரசாங்கம் பதவி விலக வேண்டும் என கோரி பல்வேறு பகுதிகளி
கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது அமு
படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் டி.சிவராமின் நினைவ
இலங்கை எதிர்க்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி
கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த உயிரியல் பூங்க
மகா சங்கத்தினரின் திட்டத்தின் படி கோட்டாபய ராஜபக்ச மக
பாதுகாப்பு அதிகாரிகளிடம் இருந்து உறுதிப்படுத்தல் கி
வவுனியா- பட்டாணிசூர் பகுதியை சேர்ந்த 20பேருக்கு இன்றைய
புதிய அரசமைப்புக்கான வரைபைத் தயாரிப்பதற்காக நியமிக்
