ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் நடந்து முடிந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீசை 3- 0 என வென்று ஒயிட்வாஷ் செய்தது.
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி கொல்கத்தாவில் இன்றிரவு நடக்கிறது.
காயம் காரணமாக லோகேஷ் ராகுல் விலகி விட்டதால் ரோகித் சர்மாவுடன், இஷான் கிஷன் தொடக்க வீரராக ஆடுவார் என்று தெரிகிறது.
சுழற்பந்துவீசும் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரும் தசைப்பிடிப்பால் விலகியுள்ளால் அவருக்கு பதிலாக குல்தீப் யாதவ் அல்லது புதுமுக வீரர் ரவி பிஷ்னோய் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணி அண்மையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் வென்றது. இதனால் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணிக்கு அந்த அணி கடும் சவாலாக இருக்கும் என கருதப்படுகிறது.
வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பொல்லார்ட், நிகோலஸ் பூரன், ஜாசன் ஹோல்டர், ரோமன் பவெல் அதிரடியாக ஆட கூடியவர்கள் என்பதால் இன்றைய போட்டி ரசிகர்களுக்கு விருந்து படைக்கும்.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்கும்.
கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன
50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு 20 வீரர்களை
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டா
2015-க்குப் பிறகு முதல்முறையாக ஐபிஎல் போட்டியில் பங்கேற
சர்வதேச ஒருநாள் போட்டி கிரிக்கெட் வீரர்களின் புதிய தர
இந்திய வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி,இந்திய அணியுடனா
பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், ம
வங்காளதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இ
15-வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ர
தென்னாபிரிக்கா அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில்,
ஐபிஎல் தொடர் மூன்று போட்டிகளை கடந்த நிலையில், இன்றைய ப
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந
ஐபிஎல் 2022 ஆம் ஆண்டு போட்டிக்கள் வரும் மார்ச் நான்காம் வ
ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது. ய
200 டெஸ்ட் போட்டிகளில் கடமையாற்றிய முதலாவது மத்தியஸ்தர
