நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் சூழலில், மடிப்பாக்கத்தில் கொலை செய்யப்பட்ட திமுக வட்டச் செயலாளர் செல்வத்தின் மனைவி சமீனா வெற்றி பெற்றுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க ஒரே கட்டமாக கடந்த ஜன.19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.மாநிலத்தில் சுமார் 60% வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டுஇதுவரை வெளியான தேர்தல் முடிவுகளில் பெரும்பாலும் திமுக கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக,
தமிழ்நாட்டில் மொத்தம் இருக்கும் 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. தலைநகர் சென்னையில் மொத்தம் 200 வார்டுகள் உள்ளது. அதில் இப்போது வரை வெளியான 107 வார்டுகளிலும் திமுகவே வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மிகப் பெரிய மாநகராட்சியான சென்னை மீண்டும் திமுக வசம் வந்துள்ளது முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இதில் திமுக சார்பில் 188ஆவது தொகுதியில் போட்டியிட்ட சமீனா செல்வம் வெற்றி பெற்றுள்ளார். இவரது கணவர் செல்வம், கடந்த பிப். மாதம் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து திமுக சார்பில் அவரது கணவர் செல்வம் போட்டியிட இருந்த 188ஆவது வார்டில் சமீனா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் இந்தத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஆனந்தியை 2,975 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
தமிழகம் வரும் இலங்கை தமிழர்களின் பாதுகாப்பு உறுதி செய
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் பல மாவட்டங்களில் க
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், இமாச்சலப் பிரதேசத
அரசியல் ஆலோசகர்
நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் 6 புரிந்துணர்வு ஒப உக்ரைனில் இருந்து தனது வளர்ப்பு நாய்களுடன் தமிழகத்தி கேரளாவின் பாலக்காடு மாவட்டம் மலம்புழா பகுதியில் உள்ள தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13-ந்தேதி கேரளாவில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் யானை பாகன் மீ கர்நாடகத்தின் அடையாளமாக கருதப்படும் மைசூர் தசரா விழா கேரள மாநிலம் கண்ணூர் மாதமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தன ஹங்வெல்ல – தும்மோதர குமாரி நீர்வீழ்ச்சியில் நீராடச் நாடாளுமன்ற மேலவை எம்.பி. தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் செல தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத்த
