வலிமை படம் நாளை ரிலீஸ் ஆகிறது. அதை பெரிய அளவில் கொண்டாட அஜித் ரசிகர்கள் பிரம்மாண்டமாக தயாராகி வருகின்றனர். மேலும் கொரோனா லாக்டவுன், 50 சதவீத இருக்கை கட்டுப்பாடு உள்ளிட்டவை நீக்கப்பட்ட பிறகு வெளியாகும் பெரிய ஹீரோ படம் என்பதால் அது ரசிகர்களை மீண்டும் தியேட்டருக்கு வர வைக்கும் என சினிமா துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
வழக்கம்போல அஜித் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் தயாரிப்பாளர் போனி கபூர், ஹீரோயின் ஹுமா குரேஷி, வில்லன் கார்த்திகேயா என மற்ற பிரபலங்கள் மீடியாக்களில் பேட்டி அளித்து வருகின்றனர்.
ஆனால் வலிமை படத்திற்கு பாடல்கள் இசையமைத்து இருக்கும் யுவன் படத்தை பற்றி தற்போது ஒரு ட்விட் கூட போடவில்லை. பைனல் சவுண்ட் மிக்சிங் பணிகளில் யுவன் ஷங்கர் ராஜா பங்கேற்கவில்லை என சவுண்ட் டிசைனர் ராஜா கிருஷ்ணன் அளித்த பேட்டியில் தெரிவித்து இருந்தார். ஜிப்ரான் தான் அந்த பணிகளில் அவருடன் இருந்திருக்கிறார்.
யுவன் அஜித்துக்கு இதற்கு முன்பு ஏழு படங்களில் இசையமைத்துள்ளார். ஆரம்பம், பில்லா, மங்காத்தா என பல படங்களில் இசை பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது எட்டாவது முறையாக வலிமை படத்திற்கு யுவன் - அஜித் கூட்டணி சேர்ந்தது.
ஆனால் பிரச்சனையால் யுவன் பாதியிலேயே வெளியேறி இருக்கிறார் என தெரிகிறது. தற்போது படத்தின் ரிலீஸ் நேரத்தில் கூட ஒரு வார்த்தை கூட ட்விட்டரில் பதிவிடாத யுவன் மீது அஜித் ரசிகர்கள் கோபத்தில் இருக்கின்றனர்.
காமெடி நடிகர்களில் கவுண்டமணி-செந்தில் இடத்தை யாராலும
பிக்பாஸ் 5வது சீசனின் வெற்றியாளராக ராஜு தேர்வாகிவிட்ட
சின்னத்திரையில் இருக்கும் பிரபலங்களுக்கு ஒரு ஆசை இரு
நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘ந
பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் சமீபத்தில் மாரடை
தமிழ் சினிமா ரசிகர்களால் நடிகை சமந்தாவின் விவாகரத்தே
நடிகர் சிம்பு தனது வருங்கால மனைவியை தெரிவு செய்துவிட்
போடா போடி’ திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுக
நடிகை லொஸ்லியா நேர்கானல் ஒன்றில் தன்னுடைய முதல் காதல்
இந்திய சினிமாவில் ச
தமிழ் சினிமாவில் ‘மைக்’ என்றாலே சட்டென்று நினைவுக
தமிழகத்தில் கடந்த ஆண்டை போல கொரோனா பரவல் மீண்டும் அதி
பீஸ்ட் படத்திற்கு எதிர்பார்த்த அளவுக்கு ரெஸ்பான்ஸ் க
விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் தற்போது கோமாளி
