நேற்று இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மிக விரைவில் வெளியிட எதிர்ப்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன குறிப்பிட்டார்.
அதன்படி எதிர்வரும் ஏப்ரல் மாதம் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கொவிட் தொற்றுநோய் காரணமாக பல சந்தர்ப்பங்களில் பிற்போடப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நேற்று நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் வழமை போன்று நடத்தப்படும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, கொவிட் தொற்றுநோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
கொரோனா பரவல் காரணமாக , 2021ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை சுமார் 5 மாத கால தாமதத்தின் பின்னர் இன்று நடைபெற்றது.
இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு 255,062 சிங்கள மொழி மூல பரீட்சார்த்திகளும் 85,446 தமிழ் மொழி மூல பரீட்சார்த்திகள் உட்பட மொத்தம் 340,508 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.
மேலும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை 2,943 பரீட்சை மத்திய நிலையங்களிலும், 108 விசேட மத்திய நிலையங்களிலும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொரளையில் அமைந்துள்ள பிரபல மலர்ச்சாலையொன்றின் உரிமை
இலங்கை தொடர்பான ஐக்கிய இராச்சியத்தின் பயண ஆலோசனையில்
அமெரிக்காவிற்கு பயணிக்க மோசடி செய்பவர்களால் விளம்பர
பசில் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் தட்டுக
2022 ஆம் ஆண்டிற்கான ´புக்கர்´ விருது இலங்கை எழுத்தாளர
இலங்கையின் கடனை மறுசீரமைப்பதில் கடன் வழங்கும் நாடாக அ
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஏப்ரல்
உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரிக
யாழ்ப்பாணம் - மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்து
நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூ
பாணந்துறையில் உள்ள உணவகம் மற்றும் விடுதி ஒன்றில் தி
முன்னாள் ஜனாதிபதியின் மகன் நாடாளுமன்ற உறுப்பினர் நாம
உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தை உறுதி செய்வதற்
அரசாங்கம் அனைத்து விடயங்களிலும் தோல்வியடைந்துள்ளது
