நடன இயக்குனர், கதாநாயகன், இயக்குனர் என பல பரிணாமங்களில் பயணித்து கொண்டிருக்கும் பிரபு தேவா தற்போது ரேக்ளாவில் இணைந்திருக்கிறார் இது அவருடைய ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியிருக்கிறது.

'வால்டர்' திரைப்படத்தின், இயக்குனர் அன்பு அடுத்ததாக நடிகர் பிரபு தேவா நடிக்கும் படத்தை இயக்குகிறார். பிரபு தேவாவின் 58-வது திரைப்படமான இந்த படத்தை ஒலிம்பியா மூவிஸ் சார்பில் அம்பேத் குமார் தயாரிக்கிறார். இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது. நடிகர் ஆர்யா இந்த திரைப்படத்தின் டைட்டிலை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த திரைப்படத்திற்கு 'ரேக்ளா' என்று பெயரிடப்பட்டுள்ளது.

ரேக்ளா படத்தின் டைட்டல் லுக்
'ரேக்ளா' திரைப்படத்திற்கான பிற நடிகர்கள் மற்றும் படக்குழுவிற்கான தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் படக்குழு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. நடிகர் பிரபு தேவா தற்போது 'பஹீரா' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பட
அஜித் இந்த வருட ஆரம்பத்தில் இருந்து வெற்றிக் கொண்டாட்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடி
பொலிவூட் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நடி
கேஜிஎப் 2 படத்திற்கு இந்திய அளவில் பிரம்மாண்ட வரவேற்ப
இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு
தமிழ் சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வரும் நயன்தாரா
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சூர்யா.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த ‘சூரரைப்போற்
‘திருடா திருடி’ படம் மூலமாக தமிழில் நடிகையாக அறிமு
இந்தி சின்னத்திரையுலகில் பிரபல நடிகராக திகழ்ந்து வந்
கீர்த்தி சுரேஷ் அவரது அக்கா பிறந்தநாளை குடும்பத்தினர
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கடந்த வாரம் இரண்டு ப
பாக்கியலட்சுமி தொடரில் செழியன் ரோலில் இருந்து நடிகர்
மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த
