இலங்கையில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12.1 ஆக இருந்த பண வீக்கம் 2022 ஜனவரியில் 14.2 வீதமாக உயர்ந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 டிசம்பர் மாதம் 22.1 வீதமாக பதிவாகியிருந்த உணவு பணவீக்கமானது, 2022 ஜனவரியில் 25 சதவீதமாக அதிகரித்ததுள்ளது.
அதேவேளை 2021 டிசம்பரில் 7.5 சதவீதமாக இருந்த உணவு அல்லாத பணவீக்கம் 2022 ஜனவரியில் 9.2 சதவீதமாக உயர்வடைந்துள்ளதாக மத்திய வங்கி கூறியுள்ளது.
அதன்படி, உணவு வகைக்குள் உள்ளடங்கியுள்ள, அரிசி, புதிய பழங்கள், பால் மா மற்றும் பாண் ஆகியவற்றின் விலைகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், போக்குவரத்து, வீட்டுவசதி, நீர், மின்சாரம், எரிவாயு மற்றும் பிற எரிபொருள் ஆகியவற்றில் காணப்பட்ட விலை அதிகரிப்பு காரணமாக உணவு அல்லாத பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
கல்வித்துறை சார்ந்த உயர் கல்வி மற்றும் தொழில் பயிற்சிக்கான பாடநெறி கட்டண அதிகரிப்பு, உணவகம் மற்றும் விடுதி துறை சார்ந்த துணைப் பிரிவுகள் சார்ந்த உணவு அல்லாத பொருட்களின் விலைகளிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி கூறியுள்ளது.
அடக்குமுறையைக் கையாள்வதன் ஊடாக அரசியல் மற்றும் சமூக ஸ
அலரி மாளிகைக்கு எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம
எமது தாய்நாட்டின் இருப்பு மற்றும் அழகிற்காக சமுத்திர
பிணை முறிக்கடனைத் திருப்பிச் செலுத்துவதை தாமதிப்பதற
பாணந்துறையில் உள்ள விகாரைக்கு அருகாமையிலுள்ள கற்பாற
யாழில் 7251 குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா பெறுமதியான
என்ன நடந்தாலும் நாட்டை முடக்குவதில்லை என்ற கடுமையான ந
மூன்றில் இரண்டு பெரும்பான்மை கட்டுவதில் சந்தேகம் இரு
இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரியவின் சாரதிக்கு கொரோனா
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மாமியார் காலமாகியுள்ள
கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள
பெலியத்தவிலிருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த ரயி
உலக நாடுகள் அனைத்திலும் கொரோனாவினால் மரணிப்பவர்களை அ
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில நேரங்களில் மழை அ
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் தற்போது
