More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இலங்கையின் சுதந்திர தினத்தில் போராட்டத்திற்கு அழைப்பு!
இலங்கையின் சுதந்திர தினத்தில் போராட்டத்திற்கு அழைப்பு!
Feb 02
இலங்கையின் சுதந்திர தினத்தில் போராட்டத்திற்கு அழைப்பு!

இலங்கையின் சுதந்திர தினமான  எதிர்வரும் நான்காம் திகதி,  காலை 10 மணியளவில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் மற்றும் வடகிழக்கு சிவில் சமூகங்களின் ஏற்பாட்டில் மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட இருக்கின்றது.



 குறித்த போராட்டத்தில் இளைஞர் யுவதிகள், பல்கலைகழக மாணவர்கள், பொதுமக்கள், வர்த்தகர்கள், தனியார் பேருந்து சங்கங்கள், தமிழ்த்தேசியத்தின் பால் செயற்பட்டு வருகின்ற கட்சிகள், மதகுருமார்கள் என அனைத்து உறவுகளும் கலந்து கொண்டு   ஆதரவினை வழங்குமாறு  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்  அழைப்பு விடுத்துள்ளனர்.



இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 



தமிழினத்திற்கான சுதந்திரம் கிடைக்காத நிலையிலேயே நாம் இதுவரை போராடி கொண்டிருக்கின்றோம். நாம் எமது உரிமையை இழந்திருக்கின்றோம், உறவுகளை இழந்திருக்கின்றோம்.



எனினும் உணர்வுகளை இழக்ககூடாது. தமிழனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் இது தலயாய கடமை என்பதை புரிந்துகொண்டு குறித்த போராட்டத்தில் ஒன்றிணைந்து கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கின்றோம்.



நாம் அனைவரும் ஒருமித்து குரல்கொடுத்தாலேயே எமது உரிமையையும் சுதந்திரத்தையும் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளிற்கு உளரீதியான ஆலோசனைகளை வழங்க தயாராக இருப்பதாக நீதி அமைச்சர் அண்மையில் தெரிவித்தார்.



ஆனால் நாங்கள் நன்றாகத்தான் இருக்கிறோம் எமக்கு மன உளைச்சல் இல்லை. எமது உறவுகள் கிடைக்கும்வரை நாம் சோர்ந்துபோய் ஒடுங்கிவிடமாட்டோம் என தெரிவித்த அவர்கள்,  எமது உறவுகளை கொச்சைப்படுத்த வேண்டாம் என்று அவரிடம் கேட்டுக்கொள்கிறோம் என கூறியுள்ளனர்.



மேலும்  எமக்கான நீதி கிடைக்கும்வரை நாம் உறுதியாக நின்று போராடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb04

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டம் இன்று (

Mar11

இலங்கையில் உணவுப் பொதியொன்றின் விலை இன்று முதல் நடைம

Feb11

இலங்கையில் தீவிரமடைந்துள்ள இராணுவத்தின் அழுத்தம் கா

Sep20

நிகழ்நிலையில் நடைபெறவுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்

Oct07

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கு கடன் மறுசீரமைப்

Jan29


சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்ப

Oct06

இலங்கையில் கையிருப்பில் உள்ள பைசர் தடுப்பூசிகள் எதிர

Jan16

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிரமுகர்களுடன

Feb04

கொவிட்-19 தொற்றுக்குள்ளான மூன்று மாதக் குழந்தை உட்பட 13 ப

Jun16

தம்புள்ளை பகுதிக்கு சென்று மரக்கறிகளை கொள்வனவு செய்வ

Jan27

கொரோனா வைரஸ் மருந்தினை பயன்படுத்துமாறு எவரையும் கட்ட

Apr05


கிளிநொச்சி, கிருஸ்ணபுரம் பகுதியில் நேற்று மாமனாரு

Sep30

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதி

Dec30

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் எதிர்காலத்தில்

Jan18

ஒமிக்ரோன் மாறுபாட்டால் நாடு பெரும் பேரழிவை நோக்கிச் ச

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 03 (05:15 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 03 (05:15 am )
Testing centres