ஊர்காவற்துறை பகுதியில் கர்ப்பிணி பெண்ணொருவரை அடித்து படுகொலை செய்த பின்னர், நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் , ஐந்து வருடங்களின் பின்னர் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் புதன்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் , எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஊர்காவற்துறை பகுதியில் கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி ஞானசேகரன் ஹம்சிகா (வயது 27) எனும் 7 மாத கர்ப்பிணியான பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டு , அவரது நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
அது தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வந்த நிலையில் ஐந்து வருடங்களின் பின்னர் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை குறித்த கொலை சம்பவம் தொடர்பில் கொலை நடந்த அன்றைய தினமே சகோதரர்கள் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் 17 மாத காலம் அவர்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மேல் நீதிமன்ற உத்தரவில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா கனகராயன்குளத்தில் நடமாடும் தடுப்பூசித் திட்
நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா இன்ற
லங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதா
இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் வந்திருந்த வெளிநாட்டவர்
நாட்டில் இந்த வார இறுதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்
மத்திய கிழக்கு நாடுகளுடன் பொருளாதார உறவை மேம்படுத்து
எதிர்வரும் இரண்டு வாரங்களில் நாட்டில் கொவிட் தொற்றாள
பாக்கு நீரிணையில் தொடரும் மீனவர் பிரச்சினை இலங்கை-இந்
தியாக தீபம் திலீபனின் 35 ஆவது நினைவு தினம் இன்று யாழ்
நாட்டின் சில பிரதேசங்களில் 8 மணித்தியாலங்களுக்கு நீர்
தமிழர்கள் தீர்வுக்காகவும் நீதிக்காகவும் ஜனநாயக வழிய
மத்திய வங்கியின் வெளிநாட்டு கையிருப்பு நிலைப்பாட்டி
பொதுநலவாய நாடுகளின் நிதி அமைச்சர்களுடன் இலங்கை பிரதி
கொட்டாஞ்சேனை - பரமானந்தா மாவத்தையில் இடம்பெற்ற துப்பா
குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால கொள்கைகளை வகுப்பத
