அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு மாதாந்தம் 175முதல் 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் விடுவிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத்தை சந்தித்து, இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, நாட்டில் ஏற்படவுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான பற்றாக்குறையைத் தவிர்ப்பதற்காக இந்த கோரிக்கையை அவர்கள் முன்வைத்துள்ளனர்.
துறைமுகத்தில் சிக்கியுள்ள சுமார் 1,500 கொள்கலன்களின் பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்வதற்கு செலுத்தப்பட வேண்டிய அமெரிக்க டொலர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன டெய்லி மிரருக்கு தெரிவித்தார்.
எவ்வாறாயினும் தற்போது நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு இல்லை என்றும் அவர் கூறினார்.
எனினும் சர்வதேச கம்பனிகளுக்கு செலுத்துவதற்கு அந்நிய செலாவணி கிடைக்கப்பெறாவிட்டால் அது இலங்கை வர்த்தகர்களின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்யும் எனவும் சுட்டிக்காட்டினார்.
இலங்கை தற்போது பருப்பு, கோதுமை, பருப்பு, சர்க்கரை மற்றும் அரிசி போன்ற உணவுப் பொருட்களை சர்வதேசத்திடமிருந்து இறக்குமதி செய்கிறது.
ஹெரோய்ன், ஐஸ் உள்ளிட்ட பெருந்தொகை போதைப்பொருள் கடத்தல
இன்று வியாழக்கிழமை 2 மணிநேர மின்வெட்டுக்கு
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி ந ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் “சுபீட்சத்தின் நோக்க கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசாங்கத்தால் விரைவில் நிர்வாக ரீதியான விடயங்களில் இராணுவத்தினர் ஈடுபடுத்த யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பகடி வதை மற்றும் துன்புற போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை எடுக்க கோரி ஐந்தம்ச கோ பணிப்பெண்களாக வௌிநாடுகளுக்கு செல்லும் 45 வயதிற்கும் க இலங்கையில் இந்த ஆண்டில் ஒரே நாளில் அதிகபட்ச கொரோனா நோ மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தாந்தாமலை பகுதியில் கு மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணியாளர்களாக செல விலங்குணவு உற்பத்திக்காக வருடாந்தம் 600000 மெறரிக்தொன் ச கொலன்ன பகுதியில் கொள்ளையிடப்பட்ட இரண்டு மோட்டார் சைக
இலங்கையின் மத்திய வங்கியானது முக்கிய அறிவிப்பு
