உக்ரைனில் கடுமையாக போர் நடந்து வருவதால், அங்கிருந்து மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.
போலந்து, ஹங்கேரி, ருமேனியா, ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளின் எல்லைகளில் இலட்சக்கணக்கானோர் குவிந்துள்ளார்கள்.
இந்நிலையில், உக்ரைனில் கடந்த 24 ஆம் திகதி போர் தொடங்கியதில் இருந்து 12 நாட்களில் 17, 35,000 பேர் அகதிகளாக வெளியேறியுள்ளதாக ஐ.நா அகதிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அகதிகளுக்கான ஐ.நா.சபை உயர் அதிகாரி பிலிப்போ கிராண்டி ட்விட்டரில், ‘உக்ரைனில் இருந்து 12 நாட்களில் 17 இலட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்’ என தெரிவித்துள்ளார்.
இதில் ஐந்தில் மூன்று பங்கு, அதாவது கிட்டத்தட்ட 10,30,000 பேர் போலந்து சென்றதாகவும், 1,80,000 பேர் ஹங்கேரிக்கும், 1,28,000 பேர் ஸ்லோவாக்கியாவிற்கும் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர ருமேனியா உள்ளிட்ட நாடுகளிலும் உக்ரைன் அகதிகளின் வருகை கணிசமாக உள்ளதாக ஐ.நா. அகதிகள் அமைப்பு கூறியுள்ளது.
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் உள்பட பல்வேறு
கொரோனாத் தொற்றின் நெருக்கடிக்கு மத்தியிலும் போர்த்த
உலகளவில் தற்போது 100,839,430 பேருக்கு கொரோனா வைரஸ்
பாகிஸ்தானில் காதல் பிரச்சனையில் ஏற்பட்ட மோதலில் 4 வயத
இங்கிலாந்தில் கடந்த 1940 முதல் 1945 வரை பிரதமராக இருந்தவர்
உள்நாட்டுப் போர் மற்றும் வறுமையால் வாடும் ஆப்பிரிக்க
அவுஸ்ரேலியாவில் சர்ச்சைக்குரிய சட்டம் அமுலுக்கு வந்
ஐ. நா சபையின் ஜெனிவா மனித உரிமைச் சபை அமர்வு ஆரம்பமாகிய
பிரான்ஸில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொது சேவைகளுக்கான
மஹ்சா அமினி என்ற இளம் பெண் பொலிஸ் காவலில் இறந்ததை எதிர
கடந்த நவம்பர் மாத இறுதியில், தென்னாப்பிரிக்காவில் கண்
யுக்ரைனில் ரஷ்ய இராணுவத்திற்கு எதிராக போரிட்டதற்காக
ஜேம்ஸ் பாண்ட் பட ஹீரோ டேனியல் கிரேக்கிற்கு, இங்கிலாந்
சிங்கப்பூரில் இருக்கும் ஒரு மசாஜ் பார்லர் நடத்துனருக
உக்ரைனின் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய கௌரவ விர
