சந்தையில் சில சீமெந்து நிறுவனங்கள் தங்களது உற்பத்திகளுக்கான விலையை அதிகரித்துள்ளன. இதற்கமைய சுமார் 1,500 ரூபாவாக காணப்பட்ட ஒரு மூடை சீமெந்து தற்போது 1,850 தொடக்கம் 1,900 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சந்தையில் விற்பனை செய்யப்படும் ஒரு தொன் இரும்பு கம்பியின் விலை 38,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது. கடந்த மூன்று நாட்களுக்குள் இவ்வாறு விலை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னர் 254,500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு தொன் இரும்பு கம்பியின் விலை தற்போது 292,500 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதற்கமைய 10 மில்லிமீற்றர் இரும்பு கம்பி ஒன்று 1,040 ரூபாவுக்கும், 12 மில்லிமீற்றர் கம்பி 1,500 ரூபாவுக்கும், 16 மில்லிமீற்றர் கம்பி ஒன்று 1,725 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆயினும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் வீழ்ச்சி காரணமாக மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளதோடு எதிர்காலத்தில் குறித்த கம்பிகளின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என உற்பத்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
2022 ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல் முழுமையான தடுப்பூசி செ இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 72 ஆயிரத்தைக யாழ் போதனா மருத்துவமனையில் நேற்று திங்கட்கிழமை நிலவர கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வெளியிடப்பட்ட சுகாதார வழி எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கலந்து கொண்ட எதிர் ஒன்றிணைந்த சுகாதார சேவையாளர்கள் சங்கம் மீண்டும் தொழி கால்நடை தீவனத்திக் விலை உயர்வால் முட்டை உற்பத்தியாளர சர்வதேச தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு இன்றையதினம் ந உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 108 பேர் தாக் ஒருமித்த நிலைப்பாட்டில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை வவுனியா சாந்தசோலை பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த ச நடைமுறைப்படுத்தவிருந்த ஊரடங்கு சட்ட நேரத்தில் மாற்ற இனப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் தேசிய பேரவையில் த இலங்கையில் மேலும் நான்கு கொரோனா மரணங்கள் பதிவாகின என
