மூலப்பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாகவே ஷொப்பிங் பைகள் மற்றும் லஞ்ச் சீற்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்தகவலை அகில இலங்கை பொலித்தீன் உற்பத்தியாளர்கள் மற்றும் மறுசுழற்சியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி ஒரு ரூபாவுக்கு விற்கப்பட்ட ஷொப்பிங் பையின் மொத்த விலை 2 ரூபாவாகவும் 5 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஷொப்பிங் பையின் விலை 9 ரூபாவாகவும் 10 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஷொப்பிங் பையின் விலை 17 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.
அத்துடன் சுற்றுச்சூழலுக்கு உகந்த லஞ்ச் சீற்றின் விலை 2.50 ரூபாவிலிருந்து 3.50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை மூன்று மாதங்களாக மூலப்பொருட்களை உரிய முறையில் இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் சுமார் 500 தொழிற்சாலைகள் உற்பத்தி நடவடிக்கைகளை கைவிட்டுள்ளதாகவும் 15,000 பேர் வேலை இழந்துள்ளதாகவும் சங்கத்தின் செயலாளர் அனுர ஹேரத் தெரிவித்தார்.
மேலும் தற்போது சுமார் 400 தொழிற்சாலைகள் இயங்கி வருவதாகவும் நாளாந்த உற்பத்திக்குத் தேவை யான மூலப்பொருட்களை கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு கிலோ மூலப்பொருளின் விலை 500 ரூபாவிலிருந்து 750 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை தொடர்ந்து அதிகரிப்பப்படும் விலைவாசிகளால் இலங்கை மக்கள் பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா காவல் நிலையத்திற்கு முன்பாக இன்று (29) காலை இடம்
பாண்டியன் குளம் கரும்புள்ளியான் பகுதியில் நேற்று ந
நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு
இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் நான்காம் திக
வாகன விபத்துக்களால் நாளொன்றுக்கு பதிவாகும் மரணங்களி
ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலையை 250 ரூபாயால் குற
பொலன்னறுவையில் இன்று காலை சாரதியின் கவனயீனத்தால் பேர
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொ
வைத்தியசாலைகளுக்காக முன்பதிவு செய்யப்பட்ட மருந்துகள
பருத்தித்துறை, மந்திகை ஆதார வைத்தியசாலை வெளிநோயாளர் ப
வாய் முகம் மற்றும் தாடை சிகிச்சை சம்பந்தமான சிகிச்சை
வவுனியா ஶ்ரீநகர் கிராமமக்கள் தமது நியாயமான கோரிக்கைக
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச்
வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் த
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்திய
