இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் வந்திருந்த வெளிநாட்டவர் ஒருவர் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் பயணித்த எகிப்திய சுற்றுலாப் பயணி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் பட்டிப்பளை புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயிலில் இருந்து தவறி விழுந்து பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் அஹமட் மொஹமட் அப்துல் ஹமிட் (32) என்ற சுற்றுலாப் பயணி என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் ஒரு வாரத்திற்கு முன்னர் இலங்கைக்கு வந்துள்ளார்.
எல்ல புகையிரத நிலையத்திற்கு உடரட மெனிகே ரயிலில் பயணித்த அவர், நேற்று (16) பட்டிப்பொல புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயிலில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும், அவருடன் வந்திருந்த அவரது நண்பர்கள் அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
குறித்த எகிப்திய பிரஜை தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார் தெரிவித்தனர்.
மஹரகம, எரெவ்வல பகுதியில் 35 இலட்சம் ரூபா பெறுமதியான டெட
70 சதவீத சம்பள உயர்வைக்கோரி இலங்கை தோட்ட சேவையாளர் சங்க
பழைய முறைமையில் மாகாண சபைத் தேர்தலை அவசரப்பட்டு நடத்த
உலகின் தலைசிறந்த கோடிஸ்வரர்கள் இலங்கைக்கு சுற்றுலா ப
இடது கை மற்றும் மார்பில் காயங்களுடன் கூடிய ஆணின் சடலம
பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி
பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்திற்க இலங்கை அண்மைக்காலமாக பெரும் பொருளாதார நெருக்கடிக்கு பொகவந்தலாவ பிராந்திய வைத்தியசாலையில் கொவிட்-19 நோயாளர முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர்மலை தண்ணிமுறிப் போதுமானளவு குளிர்பதன் வெப்பநிலை இல்லாமல் கொண்டு செல் அமைச்சு பதவி எதையும் ஏற்காதிருக்க நாடாளுமன்ற உறுப்பி இந்தியாவில் இருந்து 600,000 ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கொர மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா
