ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க முடியாது என செர்பிய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா 27வது நாளாக போர் தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் போரை நிறுத்துமாறு வலியுறுத்தியும் ரஷ்யா போரை நிறுத்தவில்லை.
ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள், நேட்டோ நாடுகள் என பல்வேறு நாடுகளை கொண்ட அமைப்புகளும் ரஷ்யாவுக்கு எதிராக உள்ளது.
இந்நிலையில், ரஷ்யா நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க முடியாது என செர்பிய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் அலெக்சாண்டர் வுலின் கூறுகையில், ரஷ்ய குடிமக்களின் சொத்துக்கள் மற்றும் ரஷ்ய கூட்டமைப்பின் சொத்துக்கள் திருடப்படும் ரஷ்ய எதிர்ப்பு வெறியின் ஒரு பகுதியாக செர்பியா ஒருபோதும் இருக்காது.
ரஷ்யா நாட்டின் மீது எங்களால் பொருளாதார தடைவிதிக்க முடியாது. ரஷ்ய ஊடகங்களை நாங்கள் தடைசெய்ய மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையில் உலக நாடுகள் ரஷ்யாவை புறக்கணிக்கும் நிலையில், செர்பியா ரஷ்யவின் பிரபல கேஸ் நிறுவனமான காஸ்ப்ரோம் உடன் ஒரு புதிய எரிவாயு ஒப்பந்தத்தை செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.
துருக்கி மால் ஒன்றில், செல்போன் பார்த்தப்படியே நடந்த
தாய்வானின் தென்கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட 6.9 ரிக்டர்
கொவிட் தொற்று நோயால் உயிரிழந்த அமெரிக்கர்களின் எண்ணி
உகாண்டா நாட்டில் நடைபெறும் சர்வதேச பாரா பேட்மிண்டன் ப
இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் நேற்றிரவு இ
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில்,இலங்கைக்கான பயணத
பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் கில்கிட்-பால்டிஸ்தான்
உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் இராணுவ நடவடிக்கை ஒன்றை ர
ஹாங்காங் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வர உள்ளதாக ச
13 வருடங்களுக்கு பின்னர் இலங்கை மீண்டும் இரத்தம் பார்த
பிரான்ஸில் ஈரான் அரசாங்கத்திற்கு எதிரான குழுவொன்றின
உக்ரைனில் நடக்கும் போர் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மூத்த மகனும், இளவரசர
உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதல் நடத்தி வரும் நிலையி
உக்ரைன் எல்லையில் உச்சகட்ட போர் பதற்றம் அதிகரித்துள்
