இலங்கை இளைஞர், யுவதிளுக்கு கனடா உட்பட பல வெளிநாடுகளில் தொழில் பெற்று தருவதாக கூறி ஏமாற்றியவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாடுகளில் தொழில் பெற்று தருவதாக கூறி பாணந்துறை பிரதேசத்தில் பல இளைஞர், யுவதிகளை ஏமாற்றி பணம் பெற்ற நபரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நபரொருவர் பாணந்துறையில் பணம் வசூலிப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
மேலும், இந்த சந்தேக நபர் கனடாவில் வேலை பெறுவதற்கான ஒப்பந்தத்திற்காக சட்டத்தரணியுடன் வருமாறும், வரும் போது 5 லட்சம் ரூபாய் பணமும் கொண்டுவர வேண்டும் எனவும் அவரிடம் வரும் இளைஞர் யுவதிகளிடம் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய விசாரணை அதிகாரி ஒருவர் சட்டத்தரணி போன்று நடித்து சந்தேக நபரை சந்திக்க சென்றுள்ளார். அங்கு 5 லட்சம் ரூபாய் பெற்றுக் கொள்வதற்கு சந்தேக நபர் தயாரான போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் சுமார் 50 மில்லியன் ரூபாய் பணம் இவ்வாறு மோசடியான முறையில் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் மனித உரிமை மீறல்களில் ஈடு
இலங்கையின் பொருளாதாரம், சமீப சில ஆண்டுகளாக சிக்கலைச
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையால் தமக்கு எவ்வி
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை ஊரிப் பகுதியில் மூன்று லிட்
விடுதலைப்புலிகளுடனான போரில் பழிவாங்கும் உணர்வு இருந
உலகம் முழுவதும் பரந்து வாழும் இஸ்லாமியர்களுடன் இணைந்
தீபாவளி தினத்தன்று தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு பிரிவி
கொழும்பு – முகத்துவாரம் பகுதியில் துப்பாக்கி சூட்டு
நாட்டிலுள்ள இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக
யாழ். மாவட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மே
மகிந்த ராஜபக்ச தனது 2 பதவிக்காலம் முடிவடைந்ததும் ஓய்வ
வவுனியாவில் இதுவரை 362 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காண
2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் தாக்குதல்களை விசா
இலங்கையில் பாரிய மோசடியில் ஈடுபட்டவர்களின் ரகசிய கோப
கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்
