உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கொல்லப்பட்டாலும் கூட அடுத்தகட்ட திட்டங்களை உக்ரைன் சிறப்பாக வைத்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமெரிக்கச் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உக்ரைன் ஜனாதிபதி மற்றும் அவரது அமைச்சர்களின் தலைமை பண்பு மிகச் சிறப்பானதாக உள்ளது. அவர்கள் இந்த இக்கட்டான சூழலிலும் துணிச்சலான உக்ரைன் மக்களின் உருவகமாக இருந்துள்ளனர்.
நான் சமீபத்தில் தான் உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபாவுடன் பேசினேன். அவர்கள் அனைத்திற்கும் தாயாராகவே உள்ளனர்.
உக்ரைன் ஜனாதிபதிக்கு ஏதாவது நேர்ந்தாலும் கூட அரசு தொடர்ந்து எவ்வித சிக்கலும் இல்லாமல் இயங்க தேவையான அனைத்து திட்டங்களையும் தயார் நிலையில் வைத்துள்ளனர்.
ரஷ்யா மீது அறிவிக்கப்பட்டுள்ள கடுமையான பொருளாதாரத் தடைகளால் முன்னணி நிறுவனங்கள் பலவும் ரஷ்யாவில் இருந்து வெளியேறி வருகிறது.
இதனால் ரஷ்யாவுக்கு கடும் பாதிப்பு ஏற்படும். ரஷ்யா உடனடியாக இந்தப் போரை நிறுத்திக் கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
உக்ரைன் நாட்டில் போர் உக்கிரமாகத் தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மூன்றாம் சார்லஸ் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட முதல்
உலக அளவில் கொரோனா வைரசால் மிகவும் மேசமாக பாதிக்கப்பட்
உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ்
தமிழ்மொழி வரலாற்றில் டென்மார்க் நாட்டில்
உக்ரைன் நாட்டை மிக விரைவாக கைப்பற்றி, கீவ் தலைநகரை மிக மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய உலக அளவில் கோவிட் - 19 தினசரி பாதிப்பில் அமெரிக்கா உச் தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் அதிபர் இவான் டியூக் ஆப்கானிஸ்தானில் உள்ள தமது பிரஜைகளுக்கு, அமெரிக்காவும சீனா உக்ரைன் - ரஷ்ய போரை முன்மாதிரியாகக் கொண்டு தற்போத ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அம ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும், தலீபான் பயங்க உக்ரைனின் கார்க்கிவ் நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட் ப ஜேர்மனியின் நவீன ராக்கட் தொழில்நுட்பமோ அல்லது அத்தொழ ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லாவ்ரோவ் ஏப்ரல் 5
