ரஷ்யாவின் திட்டமிட்ட வெற்றி தின கொண்டாட்டங்களில் தமது அணு ஆயுத பலம் மற்றும் இராணுவ பலத்தை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்புள்ளதாக உக்ரைன் பொதுமக்களுக்கு ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் திட்டமிட்டபடி வெற்றி தின கொண்டாட்டங்களை தலைநகர் மாஸ்கோவில் முன்னெடுக்க உள்ள நிலையில், மே 9ம் திகதி கொண்டாட்டங்களுக்காக தற்போது ஒத்திகைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ரஷ்யப் படைகள் ஏவுகணை மற்றும் வான்வழித் தாக்குதல்களை தொடர்புடைய நாளில் அதிகரிக்கக்கூடும் என்று உக்ரைனிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதன் காரணமாக பொதுமக்கள் கண்டிப்பாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் எனவும் பொது ஒழுங்கை கண்டிப்பாக பின்பற்றவும் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், ரஷ்யா வெற்றி தின கொண்டாட்டங்களை முன்னெடுத்துவரும் இந்த நாட்களில், உக்ரைன் மக்கள் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைகளை புறக்கணிக்க கூடாது எனவும் ஜெலென்ஸ்கி கேட்டுக்கொண்டுள்ளார்.
உங்கள் உயிர் முக்கியம் என்பதை புரிந்துகொள்ளுங்கள் எனவும், உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி விழிப்புடன் இருங்கள் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், ரஷ்யா கைப்பற்றியுள்ள பகுதிகளில் மக்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த பகுதிகளில் ரஷ்யா கண்ணிவெடிகளை புதைத்து சென்றிருக்கலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
பொது பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கப்படக்கூடிய நோவாவாக்
உக்ரைன் கடற்கடையில் நேட்டோ உறுப்பினர் நாடான எஸ்டோன
உக்ரைனுக்குள் ரஷ்ய படைகள் ஊடுருவியுள்ள நிலையில், ரஷ்ய
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்க
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
உக்ரைன் வான்பரப்பில் விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சிக்கு எதிராக ஐ.எஸ்.
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர
ஜனவரி 18 , 2021
இங்கிலாந்தில் டெல்டா வைரஸ் தாக்கம் கடுமையாக உள்ள நிலை உக்ரைன் இராணுவத்திற்கு சொந்தமான ஆளில்லா விமானம் குரோ ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று, கென்யா. அந்த நாட்டின் 23 ராண ஜோர்டானில் ஆட்சியை கவிழ்க்க முயன்ற குற்றச்சாட்டில் ம உக்ரைனில் நிலவும் பதற்ற நிலை குறித்து நேரடி ஒளிபரப்பை
