அமெரிக்காவில் நீர் வற்றி வறண்டு வரும் ஏரியில் இருந்து மனித உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் மிகப்பெரிய நீர்தேக்கமான மீட் ஏரியில், கடந்த 2000-ம் ஆண்டு முதல் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இதற்கிடையில் காலநிலை மாற்றம் நிலைமையை தொடர்ந்து மோசமாக்கி வருவதால் மீட் ஏரி முற்றிலுமாக வறண்டு போகும் நிலைக்கு வந்துள்ளது. இந்த நிலையில் வேகமாக சுருங்கி வரும் மீட் ஏரியில் அடுத்தடுத்து மனித உடல்கள் கண்டெடுக்கப்படும் சம்பவம் அங்கு அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த 1-ம் திகதி முதன்முறையாக ஏரியின் கரையோரத்தில் சேற்றில் சிக்கிய பீப்பாய் ஒன்றில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த உடல் 1970 அல்லது 80-களில் சுட்டுக்கொல்லப்பட்ட ஒருவருடையது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் அந்த உடல் கண்டெடுக்கப்பட்ட ஒரு வாரத்துக்கு பின்பு மீட் ஏரியில் இருந்து மேலும் பல மனித உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இதுபற்றிய கூடுதல் தகவல்களை அதிகாரிகள் வழங்காத நிலையில், ஏரி முழுமையாக வறண்டு போகும்போது மேலும் பல உடல்கள் கண்டெடுக்கப்படலாம் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
பிரேஸிலில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்றில
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ந
உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய இராணுவம், தலைநகர் கீவ் மற்
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங
உகாண்டா நாட்டில் நடைபெறும் சர்வதேச பாரா பேட்மிண்டன் ப
உக்ரைன் மீது 20 வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வர
நாட்டின் 22 வீதமான மக்களுக்கு
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களை சந்தித்தார். உலகின் மிகவும் சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றான அமெரிக் தொடர்ந்து மூன்று பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த பிறகு, பாகிஸ்தானில் 65 பில்லியன் அளவில் முதலீடு செய்து சீனா பல வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் கொரோனா வைரஸ் பாதிப்ப ருமேனிய எல்லையில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கை ஆப்கானிஸ்தானின் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் ஏற் தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வ
