நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையால் தமக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை என ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கடிதங்கள் மூலம் கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதரங்களுக்கு அறிவித்துள்ளனர்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வன்முறைகள் காரணமாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கொல்லப்பட்டுள்ளதுடன் எதிர்க்கட்சியை சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பனர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் எனவும் அவர்கள் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் 50க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள், சொத்துக்கள் முற்றாக தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், பொறுப்புக் கூற வேண்டிய பாதுகாப்பு தரப்பினர் இந்த நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரவோ, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவோ நடவடிக்கை எடுக்கவில்லை என ஆளும் கட்சியின் அரசியல்வாதிகள், தூதரகங்களுக்கு அனுப்பியுள்ள கடிதங்களில் கூறியுள்ளனர்.
இதேவேளை, அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் தாம் வெட்கத்திற்கும் வேதனைக்கும் உள்ளாகி இருப்பதாகவும் அவர்கள், தமது கடிதங்களில் தெரிவித்துள்ளனர்.
நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ள வெளிநாட்டில் ப
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக நீக்குமாறு
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுர்ச்சி பேரணி&
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 70 ஆவது ஆண்டு விழாவை முன
கட்டுநாயக்க விமான நிலையத்தின் 2 ஆம் இலக்க நடவடிக்கை பி
சந்தையில் கோதுமை மாவின் விலை தற்போது குறைவடைந்துள்ளத
தோட்ட நிர்வாகம் மற்றும் கம்பனிகளுக்கு எதிராகவும், தொழ
தமிழ்த் தேசியப்பரப்பில் உள்ள அரசியல் கட்சிகளை ஒன்றிண
இலங்கையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தே
நாட்டில் தற்போது அத்தியாவசிய பொருட்கள் உட்பட மக்களின
கொழும்பு முழுவதும் நூற்றுக்கு நூறு வீதம் கொரோனா வைரஸி
நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொவிட்-19 தடுப்பூச
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்செலே
வவுனியா மாவட்டத்தில் இம்மாதம் 20 ஆம் திகதி வரை 2222 கொரோனா
இராணுவ வாகனங்கள் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய
