நேட்டோவில் இணைந்து கொள்ளும் சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளின் தீர்மானமானது பிராந்தியத்தின் இராணுவ மயமாக்கலுக்கு அச்சுறுத்தலாக அமையும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
தனது எல்லைக்கு அருகில் நேட்டோ ஆயுதங்களை நிலைநிறுத்தினால் பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
ஜேர்மனியின் தலைநகர் பேர்லினில் இன்று மாலை நடைபெறவுள்ள நேட்டோ வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டத்தில் சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் பார்வையாளர்காக கலந்து கொள்ளவுள்ளன.
இந்தக் கலந்துரையாடலின் பின்னர் நேட்டோவில் இணைவது குறித்து இரு நாடுகளும் விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு நாடுகளும் மேற்குலக நாடுகளின் இராணுவ கூட்டணியில் அங்கம் வகிக்காத பட்சத்தில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேட்டோவில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையிலேயே இரு நாடுகளும் நேட்டோவில் இணைந்து கொள்வதை அச்சுறுத்தலாக நோக்குவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இதேவேளை, உக்ரைனின் கார்கிவ் நகரிலிருந்து தமது படைகளை திரும்ப பெறுவதில் ரஷ்யா கவனம் செலுத்தியுள்ளதாக உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது.
ஆப்பானிஸ்தானில் அதிகாரத்தை கைப்பற்றிய நிலையில், ஆட்ச
உக்ரைனுக்கு 2023 ஆம் ஆண்டும் குறைந்தபட்சம் 2.3 பில்லியன் ப
தினந்தோறும் ஒரு மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை சேமிப
ரஷ்ய இராணுவப் படைகள் உக்ரைனில் உள்ள பல்வேறு நகரங்களில
கொரோனா வைரஸ் பெருந்தொற்று நெருக்கடியின்போது இந்தியா
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்ய இராணுவத்தினருக்கு ச
உக்ரைனின் கார்கிவ் நகருக்குள் ரஷ்ய துருப்புக்கள் நுழ
அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியா
12-வது நாளாக உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் நடந
ரஷ்யா - உக்ரைன் போர் இன்றுடன் 20 ஆவது நாளாக தொடர்ந்து தீவ
இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் நேற்றிரவு இ
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் வீசிய 'இயான்' ப
உக்ரைனின் முக்கிய பகுதியில் வைக்கப்பட்ட கன்னிவெடிகள
அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி, முன்னாள் ஜனா
பாகிஸ்தானின் பெஷாவர் நகர் அருகே அந்நாட்டு விமானப்படை
