விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, கர்ப்பிணி ஒருவர் விமான ஊழியர்கள் உதவியுடன் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
அமெரிக்காவில் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, ஒரு கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, விமான ஊழியர்கள் வெற்றிகரமாக பிரசவம் பார்த்து குழந்தை பெற்றெடுக்க உதவினர்.
அமெரிக்காவில் டென்வெரிலிருந்து ஓர்லாண்டோ செல்லும் ப்ரண்டியர் ஏர்லைன்ஸ் விமானத்தில் கர்ப்பிணி ஒருவர் பயணம் செய்தார். குறித்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
இதனையடுத்து விமானத்தை பென்சகோலா விமான நிலையத்திற்கு திருப்ப விமான கேப்டன் நை முடிவெடுத்தார்.
இந்த நிலையில் சமயோசிதமாக செயல்பட்ட விமானப் பணிப்பெண் டயானா ஜிரால்டோ, குழந்தை பெற்றெடுக்க கர்ப்பிணிக்கு உதவினார்.
இதன்காரணமாக, விமானம் தரையிறங்கும் முன்பே பெண் குழந்தையை பெற்றெடுத்தார் அந்த பெண்.
விமானம் தரையிறங்கியதும் விமான நிலையத்தில் காத்திருந்த மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்து பூரண ஆரோக்கியத்துடன் குழந்தை இருப்பதாக தெரிவித்தனர்.
புதிதாகப் பிறந்த பெண் குழந்தையின் தாய், பிறந்த இடத்தை குறிக்கும் வகையில், தனது குழந்தைக்கு "ஸ்கை" (வானம்) எனப் பெயரிட்டார்.
ப்ரண்டியர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது பேஸ்புக் பக்கத்தில் குழந்தையின் புகைப்படத்தையும், கர்ப்பிணிப் பெண்ணுக்கு உதவிய விமான ஊழியர்கள் புகைப்படங்களையும் பகிர்ந்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.
மேற்கத்திய நாடுகளை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடை
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் எரிபொருள் தேவையால், ரஷ்ய
உக்ரைனின் மரியுபோலில் இரும்பு ஆலைக்குள் தஞ்சமடைந்தி
இங்கிலாந்தின் ஐரிஷ் கடற்கரை நகரமான பிளாப்பூல் அருகே உ
பிலிப்பைன்சின் மத்திய பகுதியில் செபு மாகாணத்தின் மாக
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் பதவிக
பிரதமர் மோடி பிரதமராக பதவியேற்ற 2014ம் ஆண்டு முதல் ஒவ்வொ
உக்ரைன் - ரஷ்யா போர் களமுனையானது பதற்றத்திற்கு மத்திய
கனடாவில் தன்னை ஒரு பொலிஸ் அதிகாரி என அடையாளப் படுத்தி
தைவானின் தாய்டங் நோக்கி சென்றுகொண்டிருந்த பயணகள் ரெய
தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரில் நீண்ட காலமா
மேற்கத்திய நாடுகளை குறிவைத்து தாக்குதல் முன்னெடுக்க
