மரியுபோல் நகரில் அசோவ்ஸ்டல் உருக்காலையில் இருந்த உக்ரைன் படை வீரர்கள் 2 ஆயிரம் பேர் சரண் அடைந்துள்ளனர் என ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 87-வது நாளை எட்டியுள்ளது. மரியுபோல் நகரில் ரஷ்யாவின் வசம் சிக்காமல் எஞ்சி இருந்த அசோவ்ஸ்டல் உருக்காலையில் இருந்த உக்ரைன் படை வீரர்கள் 2 ஆயிரம் பேர் சரண் அடைந்துள்ளதாக ரஷ்ய ராணுவ மந்திரி செர்கே லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
சரணடைந்த உக்ரைன் வீரர்கள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

இந்நிலையில், உக்ரைனில் உள்ள மரியுபோல் நகரம் முழுவதும் ரஷ்ய படைகள் வசம் வந்துவிட்டது என ரஷ்யா ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும், கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்றியாக வேண்டும் என்ற முனைப்பில் அங்கு உக்கிரமான தாக்குதலை ரஷ்யா நடத்தி வருகிறது.
ரஷ்யா போர் விமானங்கள் அங்கு குண்டுமழை பொழிந்து வருகின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 60க்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டுள்ளது என அந்நகர மேயர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகளை அடக்கு
புதின் தனது நீண்ட காலத் தோழியான அலினா கபாவே என்ற பெண
இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் கொரோனா தொற்ற
டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின்
சீனாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஹெனன் மாகாணத்தி
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா பாதிப்பு இன்ன
உக்ரைனில் இரசாயன அல்லது உயிரியல் ஆயுத தாக்குதலுக்கு ர
உக்ரைன் - ரஷ்யா மத்தியிலான போர் மீண்டும் சூடுபிடித்து
பிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்
ரஷ்யாவின் பெல்கோரோட் பிராந்தியத்தில் இருக்கும் இராண
குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து பிர
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கர
உக்ரைனின் தெற்கு நகரமான மரியுபோலில் இரும்புத் தொழிற்
இந்தியாவில் 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு நிரந்தமா
