இந்தியாவின் கர்நாடகாவில் கர்ப்பிணி பெண்ணொருவர் , டபுள் ட்வின்ஸ் அதாவது ஒரே பிரசவத்தில் இரு ஆண் குழந்தைகளையும் இரு பெண் குழந்தைகளுமாக நான்கு குழந்தைகளைப் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா தடசா கிராமத்தை சேர்ந்தவர் ஆரிஸ். இவருடைய மனைவி அல்மாஜ் பானு. கர்ப்பமாக இருந்த அவர், திலக் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து வந்தநிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அல்மாஜ் பானுவுக்கு நேற்று அதிகாலை திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து அல்மாஜ் பானுவை அவரது குடும்பத்தினர் திலக் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது அவருக்கு திடீரென்று ரத்தபோக்கு ஏற்பட்டது. இதனால் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
இதையடுத்து, அல்மாஜிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அவரது வயிற்றுக்குள் 4 குழந்தைகள் இருந்ததை கண்டு மருத்துவர்கள் ஆச்சரியமடைந்தனர்.
இதையடுத்து டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து 4 குழந்தைகளையும் பத்திரமாக வெளியே எடுத்தனர். இந்நிலையில் தற்போது தாயும், 4 குழந்தைகளும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நீச்சல் குளம், விளையாட்டு அரங்கம் என வசதிகளுடன் உலகினà¯
43 வயதுடைய தாய் ஒருவர் ஜலதோஷ நோயினால் பாதிக்கப்பட்டு 20 வ
இலங்கையிலுள்ள அழகுக்கலை நிபுணர்கள் 500 பேருக்கு லண்டà
பொலன்னறுவை இராச்சியத்தின் ஆரம்ப காலத்தைச் சேர்ந்ததாà®
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிà®
கொரோனா தடுப்பூசி செலுத்திய நீரிழிவு நோயாளிகளுக்கு முà
பங்களாதேசில் நடைபெறவுள்ள கபடிப் போட்டியில் பங்குபற்à®
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் உதவி
இலங்கையில் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக முன்à®
தமிழகத்திலிருந்து இலங்கைக்கான அதிசொகுசு உல்லாச கப்பà®
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125-வது பிறந்தநாள், வருகிற 23-ந் த
உக்ரைனில் ரஷ்யா போர் தொடுத்ததன் விளைவாக நாட்டைவிட்டு
இந்தியாவின் கர்நாடகாவில் கர்ப்பிணி பெண்ணொருவர் , டபுள
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் மிகவும் பிரபலமாà
கிரிக்கட் வீரர் விராட் கோலியின் மகளின் வீடியோ ஒன்று
