சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பேசிய ஓடியோ ஒன்று ஊடகங்களில் கசிந்து பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த ஓடியோவில், 1.40 லட்சம் இராணுவ வீரர்கள், 953 கப்பல்களை தயார்படுத்துமாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால், ரஷ்யா பாணியில் தைவான் மீது சீனா படையெடுப்பை நடத்துமோ என்ற அச்சம் தைவான் மக்களிடையே எழுந்துள்ளது.
சீனாவில் கடந்த 1949ல் நடைபெற்ற உள்நாட்டு போருக்கு பிறகு தைவான் தனி நாடாக உருவானது. இருப்பினும் தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என ஜனாதிபதி ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு கூறி வருகிறது.
மட்டுமின்றி, தேவையெனில் தைவானை கைப்பற்ற, படை பலத்தை பயன்படுத்தவும் தயங்கமாட்டோம் எனவும் சீனா அடிக்கடி கூறி வருகிறது.
மேலும், தைவானின் வான் எல்லைக்குள் அவ்வப்போது சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளது.
இந்த நிலையில் அண்மையில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பேசிய ஓடியோ வெளியானதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, தைவான் மீது சீனா படை எடுத்தால் தைவானை அமெரிக்கா பாதுகாக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரு மாதங்களைக் கடந்த
ஜப்பானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு எதிரான அவச
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா க
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை தற்போது சடுதியாக அதிக
இந்தோனேசியா நாடு நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும்
பிரித்தானிய முன்னாள் இராணுவ விமானிகள் சீன இராணுவத்தி
இஸ்ரேலின் மிகவும் பாதுகாப்பு வாய்ந்த சிறைகளில் ஒன்றா
தமிழில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான ஆனந்தம் படம் மூலம் இய
அமெரிக்காவில் முதன்முதலாக இணை அட்டார்னி ஜெனரல் பதவிய
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் மேற்கு கடற்கரை பகுதிய
இலங்கையின் கடன் சுமையை சமாளிக்க மற்ற நாடுகள் மற்றும்
.
ஜப்பானில் மனிதனாக வாழ்வதை வெறுத்த நபர் தனது சொந்த
பாகிஸ்தானின் சாதிகாபாத் நகரில் மஹி சவுக் பகுதியில் பெ
மேற்கு லண்டனில் தாயார் ஒருவர் தமது 5 வயது மகளை கழுத்தை
