பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி வகித்து வரும் நிலையில், 2021 ஆம் ஆண்டு இறுதி வரை பாதுகாப்பு அமைச்சு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு செலுத்த வேண்டிய 5 ஆயிரத்து 641 மில்லியன் ரூபா பணத்தை செலுத்தவில்லை என தெரியவந்துள்ளது.
அமைச்சரவை பத்திரம் ஒன்றின் மூலம் இந்த தகவல் கசிந்துள்ளது. அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த அமைச்சரவை பத்திரத்தை கடந்த 30 ஆம் திகதி வெளியிட்டுள்ளார்.
நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வியத்புர வீடமைப்பு தொகுதியில் உள்ள வீடுகளை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வ இல்லங்களாக வழங்குவதற்காக இந்த அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கடந்த மே 9 ஆம் திகதி நடந்த வன்முறை சம்பவங்களில் வீடுகளை இழந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வீடுகளை வழங்குதற்கான மானியத்தை ஒதுக்குவதற்காக இந்த அமைச்சரவை பத்திரம் கொண்டு வரப்பட்டது.
இந்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைய பாதுகாப்பு அமைச்சு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு 6 ஆயிரத்து 141 மில்லியன் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் அதில் 500 மில்லியன் ரூபாய் மாத்திரமே செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பா
வாகன அபராதத்தை மின்னணு முறையில் செலுத்துதல் மற்றும் ஓ
யாழ்ப்பாணத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று
நான் ஒருபோதும் பதவியிலிருந்து இராஜிநாமா செய்யமாட்டே
ராஜபக்சக்கள் ஆட்சியில் இருக்கும் வரை இலங்கைக்கு டொலர
யாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதியில் உள்ள வர்த்தக நி
அரசியலமைப்பின் 21வது சீர்திருத்தம் நாளை (23) அமைச்சரவையி
கொழும்பு, நுகேகொடை பிரதேசத்தில் உள்ள பௌத்த விகாரை ஒன்
அமெரிக்காவிற்கு பயணிக்க மோசடி செய்பவர்களால் விளம்பர
வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை
இலங்கையிலுள்ள ஒவ்வொரு ஐந்து குடும்பங்களில் நான்கு கு
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் 14 மணித்தியாலங்கள
அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர் பதவிக்கு தெரிவ
இலங்கையின் 73ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி கோட
இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா பொது
