ரஷ்யா - உக்ரைன் இடையே ஏற்பட்டுள்ள போரில் ரஷ்யாவின் உயர்மட்ட இராணுவத் தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் ரோமன் குடுசோவ், உக்ரைன் துருப்புக்களால் கொல்லப்பட்டதாக ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது.
உக்ரைன் - டோன்பாஸ் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றின் மீது அவர் தலைமையேற்றுத் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தபோது கொல்லப்பட்டதாக ‘ரோசியா 1’ என்ற ரஷ்ய அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

‘டோனட்ஸ்க் மக்கள் குடியரசு’ என்று தம்மைத் தாமே அறிவித்துக்கொண்ட பகுதியிலிருந்து குடுசோவ் படைகளை நகர்த்தி சென்றதாக அறியமுடிந்துள்ளது.
இருப்பினும் இந்த செய்தி குறித்து ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் ஏதும் கூறவில்லை. எந்த சூழ்நிலையில் ரோமன் குடுசோவ் கொல்லப்பட்டார் என்ற விபரங்களைத் தராமல், அவர் கொல்லப்பட்டதை உக்ரைன் இராணுவமும் உறுதி செய்துள்ளது.

அத்துடன் யுத்தம் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை 12 ரஷ்ய ஜெனரல்களைக் கொன்றுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளதுடன் , குறைந்தபட்சம் 7 மூத்த ரஷ்ய ராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டதாக மேற்கத்திய நாடுகளின் உளவு அமைப்புகள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
உக்ரைன் மீதான ரஷ்ய போர் கடந்த 28 நாளாக நீடித்து வரும் நி
தங்கள் சொந்த நாட்டு இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக உக
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஹோப் விண்கலம் வெற்றிக்கரமாக ச
ரஷியாவின் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் ஜபோரி ஜி
அமெரிக்காவில் 2,600 விமான சேவையை தனியார் நிறுவனம் ரத்து ச
அபுதாபி தடுப்பூசி மையத்தின் இயக்குனர் டாக்டர் கோசி ஜா
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு பற்றி ரஸ்யாவின் தொலைக்
இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை
ரஷ்யாவின் கடுமையான தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடு
தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ர
138 நாடுகளில் கொரோனா பரவல் குறித்த தவறான தகவல்கள் மற்று
துனிசியா நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஸ்வாரா நக
உக்ரைன் நகரங்களில் போரிடுவதற்காக ரஷ்யா, சிரியா நாட்டி
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு ஏற்கனவே ஆரம்பித
ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரஷ்யா ரத்து செய்த
