ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்ய தயாராகி வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் அடுத்த சில வாரங்களில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து, அரசியலில் இருந்து ஓய்வுபெற வாய்ப்புள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்ச கடந்த வியாழக்கிழமை தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினாலும் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபட போவதாக அவர் தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை தவிர அமைச்சரவையில் ராஜபக்சவினர் எவரும் அங்கம் வகிக்கவில்லை. அவர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்குவதில்லை என ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
ராஜபக்ச குடும்பத்தில் சமல் ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச, முன்னாள் ராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச ஆகியோர் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகித்து வருகின்றனர்.
சாரதி அனுமதி பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேல
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55 ஆவது வருடாந்த மாநாட்டை இல
அரச வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தும் அமைச்சுக்கள
காணாமல் போனதாக கூறப்படும் பம்பலப்பிட்டி – புனித பீட
நாட்டின் சில பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை நீடி
பசில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற வருகை சட்ட விரோதமானது அல
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் பண மோசடி
கொழும்பு - பம்பலப்பிட்டி பகுதியில் தொடர்மாடி குடியிரு
இலங்கையில் பாதுகாப்பற்ற பாலுறவில் ஈடுபட வேண்டாம் என எ
கந்தபொல பார்க் தோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்
கொரோனா தொற்று காரணமாக மே தின ஊர்வலங்களைத் தவிர்ப்பதற்
தங்காலை நகர சபையின் புதிய தலைவர் டபிள்யூ.பி.ஆரியதாச பி
மன்னார்- சாவக்கட்டு கிராமத்திற்குள் நுழைந்த இளைஞர் கு
கட்சித் தலைவர்களுக்கிடையே இன்றைய தினம் விஷேட கலந்துர
மனித உரிமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகளுடன் ஒத்துழைத்தத
