விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து சமீபத்தில் வெளியான விக்ரம் படம் வசூல் சாதனை நிகழ்த்தியதால் விஜய்யின் 67-வது படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட, மலையாள மொழிகளில் எடுக்க இருப்பதால் ஒவ்வொரு மொழியில் இருந்து ஒரு வில்லன் நடிகர்களை தேர்வு செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இந்தி நடிகர் சஞ்சய்தத், மலையாள நடிகர் பிருதிவிராஜ் ஆகியோர் இந்த பரிசீலனையில் உள்ளனர்.
தமிழில் இருந்து அர்ஜுனை வில்லனாக நடிக்க வைக்க படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் பரவி உள்ளது.
மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் இன்னொரு நாயகியாக சமந்தா பெயர் அடிபடுகிறது என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோல்மால் இந்தி திரைப்பட நடிகையும், பிரபல டி.வி.நிகழ்ச்
பிக்பாஸ் அல்மேட் நிகழ்ச்சிக்குள் தொகுப்பாளராக நுழைந
சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் இந்தி கவர்ச்சி நடிகை பூனம
நயன்தாரா மற்றும் ஜெயம் ரவி இருவரும் தனிஒருவன் படத்தில
அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடிப்பில் கடந்
கேஜிஎப் இரண்டாம் பாகம் தற்போது இந்திய பாக்ஸ் ஆபிசில்
பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் சனம் ஷெட்டியுடன் பாலாஜி சண்டை
பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து, விஜய் தற்போது தளப
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் க
கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக
தமிழில் தோனி, கபாலி, ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட படங்
சிபி சக்ரவத்தி அ
நடிகை நயன்தாரா ரசிகர்கள் பெருமையாக கொண்டாடும் லேடி சூ
அண்மை காலமாக மிகுந்த பரபரப்பாக பேசப்பட்டு வந்த சம்பவம
