நாட்டில் அவசர கால நிலமையில் ஏற்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.
எனினும், ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டாலும், வெள்ளிக்கிழமை பிறப்பிக்கப்பட்ட அவசரகால சட்டம், தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று காலை ஆறு மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சனிக்கிழமை மாலை 06 மணியிலிருந்து திங்கட்கிழமை காலை 06 மணி வரை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்திருந்தது.
காலையில் இடம்பெற வேண்டிய ரயில் சேவைகள் மற்றும் தூர இடங்களில் இருந்து இடம்பெறவேண்டிய பஸ் சேவைகள் இடம்பெறவில்லை. இதனால், அதிகாலையில் பயணங்களை மேற்கொள்ள வேண்டியவர்கள் கடுமையான சிரமங்களுக்கு முகங்கொடுத்தனர்.
பிரதான நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள் காலைவேளையில் திறக்கப்படவில்லை. சில பஸ் நிலையங்களில் பயணிக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அறியமுடிகின்றது.
அமைதி, பொது மற்றும் தனியார் சொத்துக்களை பாதுகாக்கும் வகையில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர்காலத்தில் அவசர சத்திரசிகிச்சைகளிற்கு தேவையான ம
காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் மக்களை
நாடாளுமன்றத்தில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி.
யாழ். நல்லூர் பிரதேசத்தில் அமைந்திருக்கும் பத்திக் மற
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை கொச்சைப்படுத்துகி
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் உள்ள கிரான்குளத
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் மு
பொரளையில் அமைந்துள்ள பிரபல மலர்ச்சாலையொன்றின் உரிமை
வயோதிப தாயொருவருக்கு நேற்றைய தினம் வவுனியா நெடுங்கேண
நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தமது சிறப்புரிமை ம
கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பா
கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதா
எதிர்காலத்தில் மலேசிய வேலைவாய்ப்புக்களுக்கு மலையகத்
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்துள்ளத
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந
