இலங்கையின் மூத்த கல்வியியல் பேராசிரியர் சோ.சந்திரசேகரம் தமது 78வது வயதில் காலமானதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு அவர் காலி - பலப்பிட்டிய என்ற இடத்தில் உள்ள விருந்தகம் ஒன்றில் தங்கியிருந்தபோதே மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. அவரின் உடலம் தற்போது பலப்பிட்டிய மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
1944 டிசம்பர் மாதம் பிறந்த பேராசிரியர் சந்திரசேகரம், இலங்கையின் தமிழ் கல்வி வரலாற்றில் பாரிய பங்களிப்புக்களை செய்தவராவார். பதுளையை பிறப்பிடமாகக்கொண்ட பேராசிரியர் சோ. சந்திரசேகரம், கல்வியியல் துறையில் பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் ஹிரோசிமா பல்கலைக்கழக முதுமானி பட்டதாரியாவார்.
கொழும்பு பல்கலைக்கழக கல்வியியல் துறை முன்னாள் பீடாதிபதியாகவும், தேசிய கல்வி ஆணைக்குழுவின் முன்னாள் அங்கத்தவராகவும் மற்றும் கொழும்பு தமிழ் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் பேராசிரியர் சோ.சந்திரசேகரம் பணியாற்றினார்.
பேராசிரியர் சோ.சந்திரசேகரம், தமிழ், ஆங்கில, சிங்கள மொழிகளில் புலமை கொண்டவர் என்பதுடன் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
மேலும் மலையகத்தில் பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படவேண்டும் என்ற கொள்கையை முதன் முதலில் முன்மொழிந்தவர் பேராசிரியர் சோ.சந்திரசேகரம், ஆவார்.
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சை உடனடியாக பெற
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேலை நாட்கள் குறைக்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 108 பேர் தாக்
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலைக் கருத்திற
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப
சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் நுழைந
அரச மருத்துவமனை மற்றும் மருத்துவ நிலையங்களில் சேவையா
மன்னார் காவற்துறை பிரிவில் உள்ள சௌத்பார் கடற்கரை பகுத
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கடல் வளத்தை காப்போம்
அமைச்சர்கள் சிலர் வெளியில் கூறாமல் தடுப்பூசிகளை போடு
நிதி மோசடிச் சம்பவத்தில் ஈடுபட்டு சிறையில் உள்ள சந்தே
பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கும் ஐக்கிய தேசியக் கட்சிய
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்
அமைச்சரவை அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்களை ஜனாதிபத
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் க
